Monday, April 20, 2009

undelete recover system

நாம் சமயத்தில் நினைவில்லாமல் ஏதாவது

பைலை டிலிட் செய்து விடுவோம். அதை

ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்துவிடு

வோம். ஆனால் சில காலம் கழித்துதான்

அந்த பைல் நமக்கு தேவைபடுவது

நினைவுக்கு வரும் . அந்த நேரத்தில்

ரீசைக்கிள் பின்னில் தேடினாலும் கிடைக்காது.

அப்போது அந்த பைல் அவ்வளவு தானா?

போனது போனதுதானா என கலங்க வேண்டாம்.

நாம் அழித்த பைல்கள் நமது கணிணியில்

உள்ள டிஸ்கில் விண்டோஸ் ஆபரேடிங்

சிஸ்டம் விட்டு வைக்கும். அந்த பைலில்

உள்ள தகவல்கள் அப்படியே நமது Hard

Disc -ல் அமர்ந்திருக்கும். அந்த பகுதி

Hard Disc க்கு தேவைப்பட்டால் மட்டுமே

அந்த இடத்தை Hard DIsc எடுத்துக்கொள்ளும்.

அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்படாத வரை

நமது பைல் அங்கேயே பத்திரமாக இருக்கும்.

சரி நமது பைலை எப்படி மீட்டெடுப்பது.

அதற்கு தான் இந்த குட்டி சாப்ட்வேர் நமக்கு

உதவுகிறது. இந்த சின்ன சாப்ட்வேர்

300 கே.பி்.க்கு உள்ளே இருப்பதால்

கணிணியில் இடம்அதிகம் பிடிக்காது.

இந்த சாப்ட்வேரை இந்த தளத்திலிருந்து

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

முகவரி தளம்:-இங்கே

இதை பதிவிறக்கம் செய்து உங்கள்

கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.

பிறகு நீங்கள் அதை ஓப்பன் செய்கையில்

உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.



இதில் குறிப்பிட்டுள்ள டிரைவ் வில் நீங்கள்

டெலிட் செய்த டிரைவின் பெயரை குறிப்பிடவும்.

அடுத்து நீங்கள் நீக்கிய பைல் எந்த வகையை

சார்ந்ததோ அதை குறிப்பிடவும். குறிப்பாக

அது வேர்ட் பைலாக இருந்தால் .Doc என்றோ

எக்ஸெல் பைலாக இருந்தால் .Exe என்றோ

போட்டோவாக இருந்தால் .Jpeg அல்லது .psd

என்றோ குறிப்பிடவும். அதுபோல் நீங்கள்

பைலுக்கு பெயர் வைத்திருந்தாலும் அந்த

பெயரை குறிப்பிடலாம். அல்லது அனைதது

டெலிட் பைல்களும் அந்த டிரைவில் இருந்து

தேவை யொன்றால் எதையும் குறிப்பிடாமலும்

Search Delete File கிளிக் செய்யவும். உங்களுக்கு

இந்த தளம் ஓப்பன் ஆகும்.


இதில் நீங்கள் மீண்டும் தேடிய பைல் கிடைக்கும்.

பின் அதை கிளிக் செய்து Restore to Copying கிளிக்

செய்தால் நீங்கள் சேமிக்க வேண்டிய டிரைவ்

செல்க்ட் செய்து ஓகே கொடுக்கவும்.

நீங்கள் சேமித்த இடத்தில் நீங்கள் தொலைத்த

-டெலிட் செய்த பைல் -ஜம்மென்று அங்கு

அமர்ந்திருக்கும். பயன் படுத்தி பாருங்கள்.

கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.

No comments: