Tuesday, September 15, 2009

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்
புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.1. Sequrity Update களை நிறுவுங்கள்.உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது தானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updates செல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுது விண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்தபாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.



http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dcசில முக்கியமான அப்டேட் கோப்புகள் :Update for Windows XP (KB932823)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85Security Update for Windows XP (KB958644)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03Security Update for Windows XP (KB961371)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035bWindows Malicious Software Removal Toolhttp://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356Malware Removal Starter Kithttp://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea
மேலும் உங்கமேலும் ங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர். இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர் (Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.மால்வேரை தடுக்க - Malwarebytesஸ்பைவேரை தடுக்க - Windows Defender .இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். எல்லாவற்றையும் நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். இதை தவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை. மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :Ccleanerகணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். இது ஒரு நல்ல மென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க , மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின் பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையான எளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.Advanced System Careஇது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள் கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்கு எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.5. Hard Disk ஐ படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்றஎல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். இதன் மூலம் அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ளஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.DriveImage XML6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. ஏன் என்றால் எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. இதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால் பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும் பயர்வால் அளிக்கிறது.இதை தரவிறக்க : Zone Alarm Firewall.மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்து என்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. இதனால் வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். மேலும் தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.இதை தரவிறக்க : Winpatrol

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க
முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

Folder ஐ மறைத்து வைப்பதற்கு

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

சுருக்கப்பட்ட வார்த்தைக்கு விவரிக்கப்பட்ட வார்த்தை மென்பொருள்

சுருக்கப்பட்ட வார்த்தைக்கு விவரிக்கப்பட்ட வார்த்தை மென்பொருள்
Posted: Sat, 29 Aug 2009 05:50:15 PDT
Play Now
நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும். ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா? ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி

உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.
இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன. இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.
மென்பொருள் தரவிறக்க சுட்டிஉங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா. ஆம் என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும். மென்பொருள் சுட்டி

Posted: Sat, 29 Aug 2009 05:50:15 PDT
Play Now
நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும். ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா? ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி

உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.
இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன. இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.
மென்பொருள் தரவிறக்க சுட்டிஉங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா. ஆம் என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும். மென்பொருள் சுட்டி

சட்டரீதியான இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் உங்களுக்காக

சட்டரீதியான இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் உங்களுக்காக
சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி
நண்பர்களே இதற்கு முன் கொடுத்த நான் இன்று இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் தருகின்றேன். இந்த மென்பொருள் $19.95 விலையுடையது இலவசமாக அதுவும் சட்டரீதியாக பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுத்துள்ளேன்.

முதலில் இந்த சுட்டியிலிருந்து மென்பொருளை தரவிறக்குங்கள். சுட்டிபின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து சுட்டிFull Name என்ற பெட்டியில் உங்கள் முழுப்பெயர் கொடுக்கவும்.E-Mail என்ற இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.Confirm E-Mail என்ற இடத்தில் மறுபடியும் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.உங்கள் மேலே என்ன மின்னஞ்சல் முகவரி கொடுத்தீர்களோ அதையே மீண்டும் மூன்றாவது பெட்டியில் கொடுத்து Submit என்பதனை தேர்வு செய்யுங்கள். முடிந்தது உங்கள் மெயில் முகவரிக்கு Registration Key அனுப்ப பட்டிருக்கும்.அதை எவ்வாறு உபயோகபடுத்தப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கியிருப்பார்கள். நீங்கள் அதன் படி உங்கள் Registration Key யை நிறுவுங்கள்.

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
Posted: Fri, 28 Aug 2009 04:55:40 PDT
நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர் கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில் உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும் மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம் அக்கவுண்டிலிருந்து Logout அல்லது Sign Out செய்ய வேண்டும்.நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு வெளியே செல்லக்கூடாது. சில நேரம் செல்பேசி அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன் அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும் செல்லக் கூடாது.நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள், (Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து விடுங்கள். முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது மிகவும் நல்லது உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும்.

உங்கள் கணிணியில் உள்ள எழுத்துருக்களை பார்க்க ஒரு எளிய வழி

உங்கள் கணிணியில் உள்ள எழுத்துருக்களை பார்க்க ஒரு எளிய வழி
Posted: Mon, 07 Sep 2009 03:05:21 PDT
நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது. இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும். மென்பொருள் சுட்டி
நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை சுட்டி