கம்யூட்டரின் ஒவ்வொரு
செயலுக்கும் நமது விருப்ப
பாடலை எவ்வாறு ஒலிபரப்புவது
என பார்ப் போம்.
நாம் வழக்கமாக கம்யூட்டரை
On- செய்வோம் , Off செய்வோம்.
அவ்வாறு செய்யும் சமயம் நமக்கு
அவர்கள் கொடுத்துள்ள
டீபால்ட் சவுண்ட் தான் ஒலிபரப்பாகும் .
ஆனால் அதை தவிர்த்து
நாம் நமது விருப்பப்படி நமக்கு
விருப்பமான பாடல்களையும்
ரிங்டோன்களையும் கம்யூட்டரின்
ஒவ்வொரு செயலுக்கும்
வைத்துவிட்டால் மற்றவர்கள்
நமது கம்யூட்டரை உபயோகிக்கும்
சமயம் அட...என ஆச்சரியபட வைக்கும்.
கம்யூட்டரில் நாம் செய்யும்
செயல்கள் சுமார் 50க்கும் மேற்பட்டு
இருக்கிறது.அதில் நாம் அனைத்தையும்
எடுக்கவேண்டும் என்பதில்லை.
அடிக்கடி உபயோகிக்கும் விண்டோ
ஆன்(StartWindow ) விண்டோ
ஆப்(Exit Window ) மற்றும் ரிசைக்கிள்பின்
(Empty Recyle Bin) ஆகியவற்றில்
நமது ரிங்டோனை யோ அல்லது
பாடலையோ சேர்க்கலாம்.
பாடலை சேர்த்தால் அந்த முழுபாடலும்
ஒலிபரப்பாகும். சமயத்தில்
நமக்கு எரிச்சல் ஊட்டலாம்.
எனவே ரிங்டோனையெ தேர்வு
செய்து கொள்ளலாம். இனி பாடலை
எவ்வாறு கணிணியில்
சேர்ப்பது என பார்ப்போம்.
முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள

மீண்டும் pick a task தோன்றும். அதிலும்
sound Audio Device தேர்வு செய்யவும்.
இப்போழுது நமக்கு Voluem, Sound,Audio,Voive ,Hardware
தோன்றும். இதில் நாம் Sound தேர்வு செய்யவும்.
இதில் Programe Events -ல் கீழ்கண்ட கம்யூட்டரின்
செயல்பாடல்களுக்கான காலம் தோன்றும்.


இதை அனைத்தையும் நாம் தேர்வு செய்ய
வேண்டாம். Exit Window, Start Window, Empty
Recycle Bin மட்டும் தேர்வு செய்யலாம். (விருப்ப
பட்டவர்கள் மற்ற செயல்களுக்கும் தேவையான
பாடலை தேர்வு செய்யலாம்). முதலில் Start
Window வை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன்
Browse காலம் தோன்றும். அதை தேர்வு செய்தால்
கணிணியில் நாம் தேர்வு செய்து வைத்துள்ள
பாடலையோ - ரிங்டோனையோ தேர்வு செய்யவும்.
பின் Ok- கொடுத்து வெளியேறவும்.
நான் கம்யூட்டரை ஆன் செய்யும் சமயம்
ஊட்டி வரை உறவு படத்தில் வரும் Happy இன்று
முதல் Happy என்கிற பாடலை வைத்துள்ளேன்.
விருப்பப்படுபவர்கள் பக்திபாடலையும் வைக்கலாம்.
(பாடல்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு ராகங்கள்
உண்டு. ஒவ்வொரு ராகங்களும் நமது மனதில்
ஓவ்வொரு ரியக் ஷனை நமது மனதில் ஏற்படுத்தும்.
பாடல்களையும் - ராகங்களை யும் தனியே
பதிவிடுகின்றேன்). அதுபோல் Exit window மற்றும்
Recycle Bin நமது விருப்ப பாடல்கள் வைக்கலாம்.
இதனால் நமது கம்யூட்டருக்கு எந்த வித மான
பாதிப்பும் இல்லை. வித்தியாசத்தை விரும்புகிறவர்
களுக்கும் - புதியவர்களுக்கு மட்டும் இதை
பதிவிட்டுள்ளேன்.ஒருமுறை வித்தியாசத்தை
உபயோகித்துப்பாருங்கள். மகிழுங்கள்.
No comments:
Post a Comment