Friday, August 6, 2010

USB டிரைவை Personal Computer மாற்றலாம்

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.



அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.



மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.

இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.



 
இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்



MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

 எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும்.

Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல


ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒருஇயங்குதளம்.
இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே


WinRar கொண்டு இதை Extract ு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

ஸ்டார்ட் மெனுவை நகர்த்த


நமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்

ஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து

இங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும். இந்த சின்ன

ப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.

இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




உங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய

டிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.





உங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு

சிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்

நகர்த்துங்கள். அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்

கொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்

பெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.

பெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்

மின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்

Steps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்

மெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.




கீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம் வைத்துள்ளதை கவனியுங்கள்.




நீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்

கீழே உள்ள விண்டொவில் காணுங்கள்.



இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில் வைத்துள்ளேன்.



இப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால் Stop செய்யலாம். பயன்படுத்திப் பாருங்கள்