Thursday, October 7, 2010

நெருப்புநரியில் பல You Tube வீடியோகளை ஒரே நேரத்தில் தரவிறக்க


நண்பர்களே,
Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.aTube Catcher என்ற Youtube வீடியோகளை டவுன்லோட் செய்ய மென்பொருள் பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.ஆனால் இந்த நெருப்புநரி Addon பல Youtube வீடியோகளை ஒரே நேரத்தில் தரவிறக்க உதவுகிறது.

இந்த Addon பெயர் BYTubeD.இதை நெருப்புநரியில் நிறுவிய பின் Youtube தளத்திற்கு செல்லவும்.உங்களுக்கு பிடித்தமான வீடியோகளை Search செய்து கொள்ளவும்.பின் நெருப்புநரியில் உள்ள Tools -> BYTubeD என்பதை கிளிக் செய்யவும்.கீழே உள்ள படத்தை பெரிதாக்கி பார்க்க.

கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோகளும் கீழே உள்ளது போல் ஒரு window வில் தோன்றும் அதில் தேவையான வீடியோகளை தேர்வு செய்து start கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.


இந்த addon ஐ நெருப்புநரியில் நிறுவ இந்த சுட்டிக்கு சென்று Add to Firfox என்பதை கிளிக் செய்யவும்.

Windows 7 -ல் Recovery Disc ஐ நீங்களே உருவாக்கலாம்


Windows 7 -ல் Recovery Disc ஐ நீங்களே உருவாக்கலாம்


நமது கணினிகளில் சில சமயங்களில் இயங்குதளம் பூட் ஆகாமல் போவதும், நமது முக்கியமான டேட்டாக்கள் உள்ளே இருக்கிறதே என்ன செய்வது? என டென்ஷன் ஆவதும் வாடிக்கைதான்.

சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள், நாம் கடைசியாக நிறுவிய மென்பொருளால் கூட ஏற்பட்டிருக்கலாம். சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கு கூட விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே சென்றுதான் செய்ய முடியும். இதோ உங்களுக்காக ஒரு எளிய முறையில் விண்டோஸ் 7 இயங்குதளம் உள்ள கணினிக்கு ரிப்பேர் டிஸ்க் ஐ நீங்களாகவே எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

விண்டோஸ் 7 சர்ச் பாக்ஸில் system repair disc என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இந்த ரிப்பேர் டிஸ்க் ஐ உருவாக்க வெறும் 142 MB போதுமானது என்பதால், ஒரு Blank CD ஐ உபயோகித்தால் போதுமானது.

அடுத்து திறக்கும் Create a System Repair Disc வசனப் பெட்டியில் உங்கள் CD/DVD writer இன் ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Create Disc பொத்தானை அழுத்தி recovery disc ஐ உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இனி எப்பொழுதாவது உங்கள் கணினியில் ஏதாவது பிரச்சனை உருவாகி பூட் ஆகாமல் போனால் இந்த Recovery Disc ஐ உபயோகித்து பூட் செய்து Windows Setup [EMS Enabled] என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இனி வரும் system recovery options வசனப் பெட்டியில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து உங்கள் கணினியை நீங்களே சரி செய்து கொள்ளலாம்.

எப்பொழுதுமே கணினி நல்ல நிலையில் வேலை செய்யும் பொழுதுSystem Image ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்வது நல்லது.

போல்டர் சைஸ்: பயனுள்ள கருவிநமது கணினியின் வன்தட்டில் சில சமயங்களில், குறிப்பட்ட பார்டிஷனில் இடம் குறைவாக உள்ளது என்று செய்தி வரலாம். (Low Disc space warning) அல்லது நீங்களாக வன்தட்டில் தேவையில்லாத கோப்புகளை களைந்து, சுத்தம் செய்யலாம் என்று கருதி செயலில் இறங்கி இருக்கலாம்.

இது போன்ற சமயங்களில், 'சிறிய அளவிலான கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தானே இருக்கிறது, ஆனால் இவ்வளவு இடத்தை எது அடைத்திருக்கிறது' என்ற சந்தேகம் வருவது இயற்கை.

இது ஏதாவது temp files , தரவிறக்கம் செய்து வைத்த படங்கள், பாடல்கள், மென்பொருட்கள், அவசரத்திற்கு உருவாக்கிய கோப்புறைகளை களையாமல் வைத்த்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம்.

சரி இந்த சூழலில், நமது வன்தட்டில் எந்த எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை, Search சென்று *.* கொடுத்து தேடி Size வாரியாக வரிசைப்படுத்தி பார்ப்பதற்குள்ளாக சில சமயங்களில் கணினி தொங்கி விடலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆகிவிடலாம்.

இந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு மிகச் சிறிய சுதந்திர இலவச மென்பொருளான Folder Size ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்ற முயற்சி வெற்றியடைந்தது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த சிறிய மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, இதனை இயக்கி,

Explore பொத்தானுக்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், எந்த பார்ட்டிஷனில், எந்த ஃபோல்டருக்குள் எனும் path ஐ கொடுத்து, GO பொத்தானை சொடுக்கினால் போதுமானது.


உடனடியாக அந்த ட்ரைவில் குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் உள்ள சப் ஃபோல்டர்கள் என அனைத்தையும் திரட்டி அதன் அளவுகளோடு வரைபடமாகவே காண்பித்துவிடும். இதனை மௌஸ் வீல் கொண்டு காட்சி பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும், இடது பட்டனை அழுத்தி நகர்த்தவும், வலது பட்டனை அழுத்தி reset செய்யவும் வழியுண்டு.

இப்படி காண்பிக்கும் வரைபடத்தில் எந்த ஃபோல்டரில் அதிக அளவு கோப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு, சந்தேகமான ஃபோல்டரை க்ளிக் செய்து Explore பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் Explorer இல் அந்த ஃபோல்டர் திறக்கும், அதனை சோதித்து, தேவையற்ற பெரிய கோப்புகளை நீக்கி விடலாம்.