Saturday, December 4, 2010

கணினியில் மின் நூலகம் அமைத்தல்

என்ற முகவரியை  குறித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக கணினியில் வெவ்வேறு  துறையைச் சார்ந்த  200 PDF மற்றும் DOC கோப்புகள்  இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 200 கோப்புகளையும் பயனாளருக்கு  ஏற்ப துறை வாரியாக பிரித்து மின் நூலமாக மாற்றியமைக்கலாம். இதற்க்கு இந்த GSDL மென்பொருள் உதவுகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், அலுவலகங்கள், ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையைச்  சார்ந்தவர்களும் மின் நூலகத்தை உருவாக்கிபயன்பெறலாம்.

தரவிறக்கம் செய்யப்பட இந்த GSDL மென்பொருளை கணினியில் நிறுவிய பின்  கணினியில் மின் நூலகத்தை உருவாக்குவதற்க்கான வழிமுறைகளை காண்போம். GSDL மென்பொருளின் உதவியுடன் வன்தட்டில் உள்ள  கோப்புகளில், பயனாளர்களுக்கு தேவையான கோப்புகளை தெரிவு செய்து பதிவேற்றம் (GSDL மென்பொருளில் PDF கோப்புகளை உட்செலுத்துவது) செய்யலாம்.

நாம் தேர்வு செய்த ஒவ்வொரு கோப்புகளுக்கும் keyword அமைக்க வேண்டும்.எதற்கு இந்த keyword  அமைக்க வேண்டுமென்றால், உதாரணமாக கணினியில் லினக்ஸ் சார்ந்த கோப்புகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம், இந்த கோப்புகளுக்கு linux, linux tutorial, linux journal, open source, foss என்ற வார்த்தைகளை keyword ஆக  பயனாளரின்  விருப்பத்திற்க் கேற்ப அமைக்கலாம். இந்த keyword -னை அமைப்பதைப் பொறுத்தே மின் நூலகத்தில் சரியான கோப்பினை பயனாளர்கள் பெற முடியும்.
GSDL மென்பொருளில் உள்ள,
Gather என்ற tab - கணினியில்  உள்ள டிரைவில் சேமித்துள்ள அனைத்து கோப்புகள்ளை பார்க்க முடியும்.அதில் உள்ள வேண்டிய கோப்புகளை இதில் சேமித்து கொள்ளலாம்.
Enrich tab --  இதுதான் keyword கொடுக்க கூடிய பகுதி. 
Design tab -- உலாவில் தெரியும் நூலகத்தை டிசைன் செய்யலாம்.
Create tab -- இதில் உள்ள Bulid Collection என்ற பொத்தை கிளிக் செய்தோமானால் ,Gather , Enrich, Design என்ற tab களில் செய்த அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவு ஆகிவிடும்.
இறுதியாக Preview Collection என்ற பொத்தை அழுத்தியவுடன் , மின் நூலகம் உலாவியில்   திறக்கும்.அந்த உலாவியில் உள்ள IP முகவரியை சேமித்து வைக்கவும்.அதனை HOMEPAGE வைப்பது நல்லது.  இந்த IP முகவரியை பயன்படுத்தி தான் ஒவ்வரு முறையும் நாம் மின் நூலகத்தை பயன்படுத்த முடியும்.
ஒவ்வரு முறையும் மின் நூலகத்தை பயன்படுத்தம்போது Greenstone Server என்பதை கனைகிட் செய்து விடுத்தான்.அடுத்து  அந்த IP முகவரி மூலம் உலாவில் மின் நூலத்தை  பயன்படுத்தலாம்

No comments: