Wednesday, March 4, 2009

கோப்புப்பகிர்வான் தளங்கள;

கோப்புப்பகிர்வான் தளங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளையே பதிவு செய்திட இயலும். ஆனால் அந்தத் தளத்தின் வாயிலாக புதிய கோப்புகளை உருவாக்கிட வசதி இருக்காது.அலுவலகக் கோப்புகளை உருவாக்கிட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு எத்தனையோ வழிகளைப் பின்பற்றுகிறோம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு கணினிக்கு மாற்றுவதற்கு ஃப்ளாஷ் டிரைவ்களையெல்லாம் பயன்படுத்துகிறோம்.கோப்புப்பகிர்வான் தளங்களின் அடுத்த தலைமுறை வடிவம்தான் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ்.இதன் சிறப்பம்சங்கள் :1) கோப்புகளை எந்தக் கணினியிலும், எந்த உலவி வழியாகவும் பார்ப்பதற்கு இயலும்2) Flash Drive தேவையின்றி, எந்தக்கோப்பு எங்கே தேவைப்படுகிறதோ அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம்.3) பகிரப்பட்ட கோப்புகளின் பாதுகாப்புத்தன்மையை கடவுச்சொல்லின் மூலம் உறுதி செய்யலாம்.4) உங்கள் கோப்புகளை அடுத்தவர் பார்க்கவோ, மாற்றியமைக்கவோ அனுமதி அளிக்கலாம் / மறுக்கலாம்.5) ஒரு குறிப்பிட்ட கோப்பினை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மாற்றியமைக்கும் வசதியுண்டு.6) ஆயிரக்கணக்கான கோப்புகளை ஒரே இடத்தில் பதிவுசெய்யும் வசதி7) மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட கோப்புகளை, வெறும் உலாவி வாயிலாகவே மாற்றியமைக்கவோ, கண்ணுறவோ வாய்ப்பளிக்கிறது.தள முகவரி : http://workspace.officelive.com/குறிப்பு : இதற்காக நீங்கள் உங்களது லைவ் மின்னஞ்சல் வாயிலாக உள் நுழைந்திருத்தல் வேண்டும்.கலைச்சொற்கள்கோப்புப்பகிர்வான் - File Sharingகோப்பு - Fileமைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Officeஃப்ளாஷ் டிரைவ் - Flash Driveலைவ் - Liveஉலவி - Browserபகிரப்பட்ட கோப்புகள் - Shared Filesகடவுச்சொல் - Passwordபார்க்க - Readமாற்றியமைக்க - Editஅனுமதி - Permission
button="vert";
submit_url ="http://www.tamilnenjam.org/2009/02/blog-post_6662.html"

zip

சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம்.





அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச் செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத் தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும். உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.குறிப்பு :1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமேதளமுகவரி : http://www.wobzip.org/