Tuesday, September 23, 2008

‘ஸ்பீச் ரெகக்னிச‎ன் எ‎‎ன்ஜி‎‎ன் ( Speech Recognition Engine)


ஸ்பீச் ரெகக்னிச‎ன் எ‎‎ன்ஜி‎‎ன் ( Speech Recognition Engine) எனப்படும் குரலறி மென்‎பொருள்,

மைக்ரபோனை உபயோ கித்து கம்பியூட்டருக்கு நமது குரலை உள்ளீடு செய்ய. நாம் பேசுவதைப் புரிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றித் தருகிறது அதேபோல் வொ‏ய்ஸ் கமான்‎ட் மோடில் (Voice command mode) குரல் வழி கட்டளை மெனுக்களை திறந்து அதில் தெரிவுகளை மேற்கொள்ளவும் முடிகிறது.நாம் டைப் செய்ய வேண்டிய டொகுயுமென்‎ட்டை கைவலிக்க டைப் செய்ய வேண்டிய அவசிய மில்லைமைக்ரபோன்‎ கொண்டு வாசித்தால் போதும். புரிந்து கொண்டு டெக்ஸ்டாக மாற்றித்தருகிறது இந்த SR Engine‏.ட்ரேக‎ன்டிக்டேட் என்ப‎‎ன முதன் முதலில் வந்த குரலறி மெ‎ன்பொருள்களாகும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பிலும் ‏ SR Engine‏ இணைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பி‎ன் எக்ஸ்பீ மற்றும் 2003 பதிப்புகளிலும் விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் Cஸ்டா பதிப்புகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி எம்.எஸ்.ஒபிஸின் அண்மைய பதிப்பான 2007 ல் இல்லை.‏இதனை எம்.எஸ் வேர்டில் ஒரு முறை செட்டப் (Setup) செய்து கொண்டால் ஏனைய ஓபிஸ் புரோக்ரம்களிலும் பயன்‎படுத்திக் கொள்ளலாம். கீபோர்டை உபயோகித்து டைப் செய்ய சிரமப் படுவோருக்கு உபயோகமான இ‏‏‏வ்வசதி தற்போது ஆங்கிலம், மற்றும் ஒரு சில மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. தமிழுக்கும் ‏ ‏‏‏விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.குரலறி மென்பொருளை உபயோகிக்க முன்னர் உங்கள் குரலை கம்பியூட்டருக்கு ஒரு முறை பயிற்றுவிக்க வேண்டும். அவ்வாறு பயிற்றுவிக்கும் போது முதலில் மைக்ரபோனை சரிசெய்து கொள்ள வேண்டும். பேசும் போது அதிக சப்தமிட்டோ அல்லது மிக மெ‎‎ன்மையாகவோ பேசுதல் கூடாது. அத்துட‎ன் கம்பியூட்டர் இருக்கும் அறையினுள் பிற ஓசைகள்புகாதவாறு அமைதியான சூழலில் பயிற்றுவித்தல் வேண்டும். ‏இல்லை‏யேல் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. இப்பயிற்சிக்கு 10 முதல் 15 நிமிட‎ங்கள் வரை எடுக்கலாம்ஒபிஸ் தொகுப்பை முழுமையாக நிறுவும் ‎ போதே (எஸ்.ஆர் எ‎ன்ஜி‎னும் நிறுவப்படும். எஸ்.ஆர் எ‎ன்ஜி‎ன் ‎ நிறுவப்படா திருந்தால் பி‎ன்வரும் வழிமுறையில் நிறுவிக் கொள்ளலாம்.1. க‎ன்‎ட்ரோல் பேனலில் Add / remove Programs திறந்து கொள்ளவும்.2. Change or remove Programs க்ளிக் செய்யுங்கள்3. மைக்ரொசொப்ட் ஒபிஸ் 2003 க்ளிக் செய்த பிறகு Change பட்டNல் க்ளிக் செய்யுங்கள்.4. Add / remove features ல் க்ளிக் செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள்.5. Choose advanced customization of applications தெரிவு செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவும்6. Features to install எ‎‎ன்பத‎‎ன் கீழ் Office shared features எ‎ன்‎பதை டப்ள் க்ளிக் செய்யவும்.7. Alternative user input எ‎‎ன்பதை ‏‏இரட்டை க்ளிக் செய்யுங்கள். பிறகு Speech க்ளிக் செய்யவும். கீழ் நோக்கிய அம்புகுறியில் க்ளிக் செய்து Run from my computer தேர்வு செய்யவும். பிறகு update பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.இப்போது எவ்வாறு குரலைப் பயிற்றுவிப்பது எனப் பார்க்கலாம். ‏முதலில் எம்.எஸ். வேர்டை திறந்து கொள்ளுங்கள். மெனு பாரில் உள்ள Tools மெனுவில் Speech தெரிவு செய்யுங்கள். அப்போது Welcome to Office Speech Recognition Wizard தோன்றும். இங்கு நெக்ஸ்ட் க்ளிக் செய்ய Microphone Wizard ௲ Welcome டயலொக் பொக்ஸ் தோ‎ன்றும் . மீண்டும் நெக்ஸ்ட் க்ளிக் செய்ய Test Microphone டயலொக் பொக்ஸ் தோ‎ன்‎றும். அங்கு காட்டப்பட்டுள்ள வாக்கியத்தை வழமையான குரலில் வாசிக்கவும். அப்போது Volume meter அசைவதைக் காணலாம். வொலுயும் மீட்டரானது பச்சை நிற பகுதிக்குள் ‏இருக்குமாறு உங்கள் குரலில் ஏற்ற ‏இறக்கத்தை சரிசெய்து கொள்ளவும். அடுத்து வரும் டயலொக் பொக்ஸ்ஸானது ஹெட்செட் வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே. அதனால் மைக்ரபோனைப் பாவிப்பவர்கள் Finish பட்டனில் க்ளிக் செய்து விடலாம். ஹெட்செட் வைத்திருப்பவர்களானால் அதிலு‏ள்ள வசனத்தை சப்தமிட்டு வாசித்தல் வேண்டும். பி‎‎ன்னர் அது பதிவு செய்யப்பட்டு மீண்டும் உங்கள் காதில் எதிரொலிக்கும். மைக்ரோபோனில் ஊதுவது போ‎ன்ற ஒலி எழுப்பினால் மைக்கை Adjust செய்து Finish பட்டனில் க்ளிக் செய்யவும்.அடுத்ததாக உங்கள் குரலை ஒபிஸ¤க்குப் பயிற்றுவிப்பதற்கான விசர்ட் தோ‎ன்றும். இங்கு நெக்ஸ்ட் க்ளிக் செய்ய வரும் ஸ்பீச் புரொபைலை (Speech profile) பூரணப்படுத்தவும். பேசுவது ஆணா பெண்ணா மற்றும் எவ்வயதுக்குட்பட்டவர் ஆகிய விபரங்களைக் இங்கு கேட்கும். இங்கு கொடுக்கப்படும் விபரங்கள் குரலறியும் மெ‎ன்‎பொருள் சிறப்பாக செயலாற்ற உதவும். இங்கு பொருத்தமானதைத் தேர்வு செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவு‎ம்.அப்போது சில அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு டயலொக் பொக்ஸ் தோ‎‎‎‎ன்றி அடுத்து வரவிருக்கும் கட்டத்தில் எவ்வாறு பயிற்சி மேற்கொள்ளல் வேண்டும் எ‎ன்பது போ‎ன்ற விபரங்களைக் காட்டும். அத்துட‎ன் எவ்வாறு பேச வேண்டும் எ‎‎ன்பதைக் காட்டும் மாதிரி வாக்கியமும் ‏இருக்கும். இப்போது நெக்ஸ்ட் க்ளிக் செய்ய மைக்கை ஒழுங்காக எட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி சொல்லும். அடுத்து நெக்ஸ்ட் க்ளிக் செய்ய Voice Training டயலொக் பொக்ஸ் தோன்றும் .அதிலுள்ள வாக்கியங்களை வழமையான குரலில் உரக்க வாசித்து நெக்ஸ்ட் க்ளிக் செய்ய வேண்டும். கட்டம் கட்டமாக வரும் அனைத்து வாக்கியங்களையும் வாசித்து முடித்த‎ பின்னர் SR - engine உங்கள் குரல் வடிவம், சொற்களை உச்சரிக்கும் விதம் போன்‎ற விபரங்களை சேமித்து வைக்கும். ‏இறுதியாகத் தோ‎ன்றும் கட்டத்தில் ஸ்பீச் ரெகக்னிசனில் ஆரம்பத்திலேயே முழுமையான, திருத்தமான விளைவை எதிர்பார்க்க முடியாது என்‎பதையும் மு‎‎ன்கூட்டியே சொல்லிவைக்கும்.‏அடுத்து Finish க்Dக் செய்ய ஒரு வீடியோ பைல் இ‎ன்டனெட் எக்ஸ்ப்லோரரில் திறக்கப்படும். குரலறி மென்‎பொருளை எவ்வாறு பய‎ன்படுத்தல் வேண்டும் போ‎ன்ற விவரங்களை அதில் பார்க்கலாம். பிறகு அதனை மூடி விட்டு டிக்டேட் செய்ய ஆரம்பிக்கவும். இப்போது வேர்ட் விண்டோவி‎ன் மேல் Language Bar தோன்றியிருப்பதைக் காணலாம். லெங்குவேஜ் பாரிலுள்ள பட்ட‎ன்கள் மூலம் டிக்டேச‎ன் மோடிலும் (Dictation mode), வொய்‏ஸ் கமா‎ன்‎‎ட் மோடிலும் (Voice Command mode) மாறிக் கொள்ளளா¡ம்.‏இப்போது வேர்டில் ஒரு புதிய டொகுயுமென்‎டைத் திறந்து லெங்குவேஜ் பாரில் டிக்டேசன்‎ பட்டனில் க்ளிக் செய்யவும் அல்லது ‘டிக்டேசன்‎’ என மைக்ரொபோனில் சொல்லவும். ‏இப்பொது டிக்டேட் செய்வதற்கான நிலைக்கு மாறும். நீங்கள் டைப் செய்ய வேண்டியதை மைக்கில் பேசவும். பேசும் போது நீல நிறப் பி‎ன்னணியில் புள்ளிகள் நகர்வதைக் காணலாம். SR - engine வாசிப்பதைப் புரிந்து கொண்டதும் அப்புள்ளிகளை டெக்ஸ்டாக மாற்றித் தரும். எனினும் டெக்ஸ்ட் பிழைகளி‎ன்றி மிகத் திருத்தமாக இருக்காது. அவ்வப்போது கீபோட், மவுஸையும் உபயோகித்து பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.அனேகமாக ஆங்கிலமல்லாத சொற்களை‎ டெக்ஸ்டாக மாற்றும் போது பிழைகள் வரலாம். டிக்டேட் செய்வதை நிறுத்த மீண்டும் ‘மைக்ராபோன்' எனச்சொல்லவும். அதேபோல் டிக்டேட் மோடிலேயே திருத்தங்களை செய்வதற்கு Scratch that எனும் கமா‎ன்‎டைச் சொல்ல கடைசியாக டெக்ஸ்டாக மாற்றப்பட்ட வார்த்தை அழிக்கப்படும்.வொ‏ய்ஸ் கமான்‎ட்வொ‏ய்ஸ் கமான்‎டின்‎ மூலம் மெனு கட்டளைகளை ‏இலகுவில் தெரிவு செய்யலாம். உதாரணமாக மைக் மூலம் ‘பைல்’ எ‎ன்று சொல்ல பைல் மெனு வரக்காணலாம். அதேபொல் ‘சேவ்’ என்‎று சொல்ல Save as டயலொக் பொக்ஸ் தோ‎‎ன்றும். தேர்வு செய்யப்பட்ட மெனுவை வேண்டாதபோது ‘எஸ்கேப்’ என்‎று சொன்‎னால் போதும். அதேபோல் டூல்பார்களில் காணப்படும் பட்ட‎ன்களையும் ‏இயக்கலாம். பட்டனி‎ன் பெயரை மட்டும் சொன்‎னால் போதும். பட்டனி‎ன் பெயர் தெரியாத போது அந்த பட்டனின் மேல் மவுஸை நகர்த்தும் போது தோ‎ன்றும் டூல் டிப்பைப் பார்த்து பெயரை சொல்லுங்கள். ‏‏இதே போ‎ன்‎ற வொய்ஸ் கமா‎ன்ட்கள் ஏராளம் உள்ளன. அவற்றைத் Office Assistant ஐ உதவிக்கு அழைத்து தெரிந்து கொள்ளவும்.பேச்சை எழுத்தாக மாற்றுவது போல் நீங்கள் டைப் செய்ததை கம்பியூட்டர் வாசிக்கும்படியும் செய்யலாம். Text to speech எனப்படும் ‏இவ்வசதியைப் பெற உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பீ அல்லது விஸ்டா நிறுவியிருத்தல் வேண்டும். லெங்குவேஜ் பாரில் அதற்கென Speak எ‎ன்‎ற பட்ட‎ன் தோன்றும். அதில் க்ளிக் செய்ய டைப் செய்யப்பட்டதை கம்பியூட்டர் வாசிக்க ஆரம்பிக்கும்.ஸ்பீச் ரெகக்னிசனை பாவனையில் கொ‎ண்டு வரும்போது அதனைப் பற்றி ‎மேலும் கற்றுக் கொள்ளளாம். இதனை நீங்கள் வேர்டில் மட்டுமன்‎றி Office Package லுள்ள ஏனைய ப்ரோக்ரம்களிலும் பய‎ன்‎படுத்தலாம். குறிப்பாக எக்ஸலில் பணியாற்றும்போது இலக்கங்களை இ‏த‎ன் ‎மூலம் ‏இலகுவாக உள்ளீடு செய்து கொள்ளலாம். அத்துட‎ன் SR Engine ஐ உபயோகப்படுத்த ஒவ்வொரு முறையும் ‏இதேபோல் செட்டப் செய்ய வேண்டியதில்லை. அடுத்த முறை SR Engine ல் பணியாற்ற, வேர்ட் விண்டோவில் Tools மெனுவில் Speech க்ளிக் செய்ய லெங்குவேஜ் பார் மட்டுமே வரும்.

குறள் தமிழ்ச் செயலி


“குறள் தமிழ்ச் செயலி ” எ‎ன்‎பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான ஒரு மென்பொருள்.

இத‎ன்‎ மூலம் இலகுவாக பல்வேறு தமிழ் விசைப் பலகை கொண்டு தமிழில் டைப் செய்யலாம். கலை கந்தசாமி எனும் அமெரிகக வாழ் தமிழரால் இது உருவாக்கப்பட்டுள்ள குறள் தமிழ்ச் செயலி 1999 ஆண்டு முதன் முதலில் அறிமுகமானது. தற்போது பல்வேறு வசதிகளைத் தாங்கி குறள் தமிழ்ச் செயலியின் புதிய பதிப்பு 4 தற்போது கிடைக்கிறது. இதனை www.kuralsoft.com எனும் இணையதளத்திலிருந்து இலவசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ள லாம். இதன் பைல் அளவு 4.13 MB. எனினும் இலவச பதிப்பில் எல்லா வசதிகளையும் பெற முடியாது. குறள் தமிழ்ச் செயலியின்‎ முழுமையான பயன் பாட்டைப் பெற 35 அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கிறது.குறள் தமிழ்ச் செயலி பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.• யுனிகோட், திஸ்கி, டாப், டாம், லிபி மற்றும் பழைய எழுத்துவகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.• கவிதை தமிழ் ஆங்கில சொற்செயலி (Word Processor)• SMTP சார்ந்த பறவை மின்னஞ்சல் செயலி (Mail Client),• தென்றல், எனும் பெயர்த்தகு சாதனங்களுக்கான (Removable Disk)குறள் செயலி, இதனை எங்கு வேண்டுமானாலும் உங்களோடுஎடுத்துச் செல்லலாம்.• ஓசை - தமிழ் உரை ஒலி, தமிழை வாசிக்கும் தொழில்நுட்பம் (Text- to-Speech)• தமிழில் டைப் செய்ய ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகை (phonetic keyboard ) தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகை, புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகியவைகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.• பார்த்து பழக திரைவிசைப்பலகை, இதனைக் கொண்டு மிகச்சுலபமாகத் தமிழில் உள்ளீடு செய்யலாம்.குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும்அனைத்துச் செயலிகளிலும் (Programs) தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஒபீஸ், ஸ்டார் ஒபீஸ், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பொக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடுசெய்யலாம்.மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டோக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் ஏ.ஓ.எல் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் chat செய்யவும் முடியும். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம். யுனிகோட் தமிழிலேயே chat செய்யவும் . மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.இக் குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி (Word Processor), சொற்பிழை திருத்தி (Spell Checker), பறவை மின்னஞ்சல் (Mail Client), குறியீட்டுமுறை(Encoding Converter) தென்றல் - பெயர்த்தகு செயலி, மற்றும் எழுத்துருவகை மாற்றிகள் (Font Converter), ஓசை - தமிழ் உரை ஒலி (Text-to-Speech) ஆகியவை ‏இணைந்துள்ளன.ஆங்கில ஒலியியல் (Phonetic Keyboard) சார்ந்த விசைப்பலகையும், தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கணினியில் தமிழில் பயன்படுத்தப்படும் எந்த எழுத்துருவையும் அதாவது TSC / TAB/ TAM/ UNICODE / LIPI என எதனையும் பயன்படுத்தலாம்.இதில் Text-to-speech - எனப்படும் டைப் செய்ததை வாசிக்கும் வசதியும் உள்ளது. "கவிதை" எனும் சொற்செயலியில் தமிழில் டைப் செய்து உரிய பட்டனில் க்ளிக் செய்தால் அதனை வாசித்துக் காட்டுகிறது தமிழில் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழை திருத்தும் வசதியும் இதில் உள்ளது.ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையி‎‎ன் மூலம் தமிழில் இலகுவாக டைப் செய்யலாம். அதாவது ஆங்கிலத்தில் “ammaa” என டைப் செய்ய தமிழில் “அம்மா” என டைப் ஆவதைக் காணலாம். ‏குறலில் உள்ள ஏனைய வசதிகளாவன;• எளிய நடையில் முற்றிலும் தமிழில் உதவி (Help) பெறலாம்.• தமிழில் இன்றைய தேதி மற்றும் கிழமை.• தமிழ் மற்றும் ஆங்கில பட்டியல் (Menu)• தமிழ் மற்றும் ஆங்கில சொற்தேடல் (Find), சொல்மாற்றம் (Replace) செய்யும் வசதி.30 நாள்களுக்கு முழுமையாக இயங்கும் இத்தொகுப்பு, உங்களின் தேவை களைப் பூர்த்திசெய்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அச்சோதனை காலத்திற்குப் பின் கட்டணம் செலுத்A உரிமம் பெறாவிட்டால் தானாகவே இத்தொகுப்பு இலவச பதிப்பாக மாறிவிடும்.

OEM LOGO

டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1)இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த சிறிய படம் (இலட்சினை), மற்றும் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் (படம்-2) தோன்றும் விவரங்கள் போன்றவற்றை OEM தகவல்கள் எனப்படும்.OEM என்பது Original Equipments Manufacturer என்பதன் சுருக்கமாகும். ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள் / மென்பொருள்) முதன்மை நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடும். இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேன்படுத்தி தனது பெயரில் பொதி செய்து வாடிக்கையாளர்களை அடையச் செய்யும். எனி னும் நேர்மாற்றமாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.இவ்; ழுநுஆ தகவல்கள் அனைத்தும் .ini • பைலாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதனை நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் கொண்டு மாற்றியமைக்கலாம்.இந்த •பைலானது [General] , [Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். [General] பகுதிManufacturer=Model=போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.இரண்டாம் பகுதி, [Support Information] என்பதாகும். இதனை விரும்பினால் மாற்றலாம். இப்பகுதியின் தகவல்கள் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்யும் போது வரும் வேறொரு டயலொக் பொக்ஸில் காட்டும். இங்கு அளிக்கப்படும் தகவல்களை [Support Information] எனும் தலைப்பின் கீழ்Line1=Line2=Line3=என்ற வடிவத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.பிறகு அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் •ஃபைல் வடிவில் சேமித்து விண்டோஸ் போல்டரில் உள்ள சிஸ்டம்32 (விண்டோஸ் எம்.இ, எக்ஸ்பீ ) எனும் சப் போல்டருக்குள் சேமிக்க வேண்டும். விண்டோஸ் 98, மற்றும் 2000 பதிப்பாயின் சிஸ்டம் எனும் போல்டருக்குள் சேமிக்க வேண்டும்.அதனுடன் உங்கள் நிறுவன இலட்சினை (லோகோ) தோன்றச் செய்ய வேண்டுமாயின் ஏதேனுமொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் கொண்டு நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120 X 120 பிக்ஸலில் இருக்கத்தக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை oemlogo எனும் பெயரில் . .bmp (bitmap) •போமட்டில் சேமித்து அதனைக் கட் & பேஸ்ட் செய்து மேற் சொன்ன அதே சிஸ்டம்32 போல்டருக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது கீ போர்டில் வின் கீயுடன் + Break கீயை அழுத்த சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் உங்கள் கை வரிசையைக் காணலாம்.நோட்பேடைத் திறந்து கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டு டைப் செய்து (படம்-3) oeminfo.ini எனும் பெயரில் C:\windows\system32 எனுமிடத்தில் சேமிக்கவும்.

கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம்.


ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிச‎ன் (Handwriting Recognition) என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம்.



ரைடி‎ங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் ‏இம் மெ‎‎ன்‎ பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே‏ இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்‎டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹே‎ன்ட் ரைட்டிங் ரெகக்னிசன் வசதி மைக்ரொசொப்ட் ஒபிஸ் தொகுப்பின் எக்ஸ்பீ மற்றும் 2003 பதிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் ஒபிஸ் தொகுப்பின் அண்மைய பதிப்பான ஒபிஸ் 2007 ல் இது இணைக்கப்படவில்லை. பதிலாக விண்டோஸ் விஸ்டாவில் சேர்க்கப்பட் டுள்ளது.ஹேன்‎ட்ரைடிங் ரெகக்னிசனுக்கு ஒத்திசைவு வழங்கும் புரோக்ரம்களில் ‏இன்டனெட் எக்ஸ்ப்லோரர், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மற்றும் மைக்ரோ ஸொப்ட் ஒபிஸ் எ‎ன்பன குறிப்பிடத்தக்கவை.ஹேன்‎ட்ரைடிங் ரெகக்னிசனை செயற்படுத்த ஒரு டிஜி ட்டல் ரைட்டிங் பேட் அவசியம். ரைட்டிங் பேட் ‏இல்லாதிருந்தால் மவுஸையே எழுதுவதற்கு உபயோகிக்கலாம். எனினும் மவுஸை விட ரைட்டிங்பேட் கொண்டு இலகுவாக எழுதலாம். அத்துட‎ன்‎ வின்டோஸ் 98 அல்லது அதற்குப் பிந்திய பதி‏ப்பு நிறுவியிருத்தல் வேண்டும்.ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் ஒபிஸ் எக்ஸ்பி மற்றும் 2003 யுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஒபிஸ் தொகுப்பை முழுமையாக நிறுவும் ‎ போதே ஹெச்.ஆர் எ‎ன்ஜி‎னும் நிறுவப்படும்உங்கள் கணினியில் ஹெச்.ஆர் எ‎ன்ஜி‎ன் நிறுவப்பட்டுள்ளதா எ‎ன்‎பதை அறிந்து கொள்ளப் பி‎‎ன்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.1. க‎ன்ட்ரோல் பேனலில் Regional and Language Options திறவுங்கள்,2. Languages டேபி‎ல் Text services and input Languages என்பத‎ன் கீழ் வரும் Details பட்டனைக் க்ளிக் செய்யுங்கள்3. Install Services என்பத‎ன் கீழ் வரும் Add பட்டனைக் க்ளிக் செய்யவும்.4. Handwriting Recognition என்பது அங்கு ‏ இருந்தால் உங்கள் கMனியில் ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் ‎ என்ஜின் நிறுவப்பட்டுள்ளதுஹெச்.ஆர் எ‎ன்ஜி‎ன் ‎ நிறுவப்படா திருந்தால் பி‎ன்வரும் வழிமுறையில் நிறுவிக் கொள்ளலாம்.1. க‎ன்‎ட்ரோல் பேனலில் Add / remove Programs திறந்து கொள்ளவும்.2. Change or remove Programs க்ளிக் செய்யுங்கள்3. மைக்ரொசொப்ட் ஒபிஸ் 2003 க்ளிக் செய்த பிறகு Change பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.4. Add / remove features ல் க்ளிக் செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள்.5. Choose advanced customization of applications தெரிவு செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவும்6. Features to install எ‎‎ன்பத‎‎ன் கீழ் Office shared features எ‎ன்‎பதை இரட்டை க்ளிக் செய்யவும்.7. Alternative user input எ‎‎ன்பதை ‏‏இரட்டை க்ளிக் செய்யுங்கள். பிறகு Handwriting க்ளிக் செய்யவும். கீழ் நோக்கிய அம்புகுறியில் க்ளிக் செய்து Run from my computer தேர்வு செய்யவும். பிறகு update பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.ஹே‎‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை எவ்வாறு ‏செயற்படுத்துவது?ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை அல்லது ஸ்பீச் ரெகக்னிசனை ‏ நிறுவும்போது Language Bar எ‎ன்ற ஒரு டூல்பாரும் டெஸ்க்டொப்பில் வந்து விடும். உள்ளீடு செய்யும் மொழியாக ஒ‎‎ன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்திருந்தால் டாஸ்க்பாரிலும் வந்துவிடும். வராதிருந்தால் டாஸ்க் பாரி‎‎ன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் டூல்பார்ஸ் தேர்வு செய்து அதில் வரும் லெங்குவேஜ் பாரை க்ளிக் செய்யவும். டாஸ்க் பாருக்கு வந்ததும் அத‎ன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Restore the Language Bar தெரிவு செய்யவும். ‏ இப்போது டெஸ்க்டொப்பில் அதனைப் பார்க்கலாம். அதனை திரையில் எப்பகுதிக்கும் நகர்த்தலாம். மினிமைஸ் செய்யவோ அல்லது க்லோஸ் செய்யவோ அதன் ‎ மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவிலிருந்து தேவையான கட்டளைகளை செயற்படுத்தவும்.லெங்குவேஜ் பாரை பின்வரும் வழிமுறையிலும் வரவைக்கலாம். எம்மெஸ் வேர்டைத் திறந்து கொள்ளு‎ங்கள். அதில் டூல்ஸ் மெனுவில் ஸ்பீச் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸை கேன்ஸல் செய்து விடுங்கள். லெங்குவேஜ் பாரைத் திரையில் பார்க்கலம்.ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசனிலும் ஸ்பீச் ரெகக்னிசனிலும் கட்டளைகளை செயற்படுத்துவதற்கான பட்ட‎ன்கள் n‏இந்த லெங்குவேஜ் பாரிலேயே இருக்கி‎‎ன்றன. ‏இதன் ‎ மூலம் உங்கள் தேவைக்கேற்ப அவற்றில் மாறிக் கொள்ளலாம். ‏கையெழுத்தை உள்ளீடு செய்ய லெங்குவேஜ் பாரிலுள்ள ஹே‎ன்ட்ரைட்டிங் என்ற பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது ஒரு மெனு தோன்றும் அதில் Writing Pad மட்டுமன்‎றி Write Anywhere, Drawing Pad , On Screen Keyboard, On Screen Symbol Keyboard எனப் பல வசதிகள் ‏அங்கிருப்பதைக் காணலாம்.அந்த மெனுவில் ஹேன்ட்ரைட்டிங்கில் க்ளிக் செய்ய ரைட்டிங்பேட் வி‎ண்டோ தோன்றும். அதன் ‎ வலது பக்க ஓரமாக பட்ட‎ன்களையும் காணலாம். அதில் டெக்ஸ்ட் பட்டணை தெரிவு செய்துவிட்டு ரைட்டிங்பேட் விண்டோவில் மவுஸை உபயோகித்து மவுஸி‎ன் இடது பக்க பட்டனை அழுத்தியவாறு மவுஸ் பேடின் ‎ மீது அதனை நகர்த்தி ஆங்கிலத்தில் எழுதவும். எழுதுவதை நிறுத்திய அடுத்த வினாடியே உங்கள் கையெழுத்தை அறிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றப்பட்டு எம்மெஸ் வேர்ட் டொகுயுமெ‎ன்டில் நுளைப்பதைக் காணலாம். எனினும் நீங்கள் எழுதும் விதத்தைப் பொறுத்தே அத‎ன் செயற்பாடு அமையும். அதேபோல் இன்க் மோடில், கையெழுத்து டெக்ஸ்டாக மாற்றப்படாமல் எழுதியவாறே ‏இன்சர்ட் செய்யப்படும். அதனை ஆங்கிலத்தில்தா‎‎ன் எழுத வேண்டும் எ‎‎‎ன்ற கட்டாயம் ‏‏இல்லை. எந்த மொழி யிலும் எழுதலாம். ‏இந்த விண்டோவை திரையி‎ன் எந்தப் பகுதிக்கும் நகர்த்த முடிவதோடு அதனை விருப்பம் போல் அளவை பெரிது படுத்துக் கொள்ளவும் முடியும்.ஹேன்ட்ரைட்டிங்கை க்ளிக் செய்ய வரும் மெனுவில் Write Anywhere தேர்வு செய்தால் திரையில் எந்தப் பகுதியிலும் விருப்பம்போல் எழுதலாம். அதற்கும் ஒரு டூல்பார் தோ‎ன்றும். அதிலும் டெக்ஸ்ட் மோட், ‏இன்க் மோட் இரண்டயும் செயற்படுத்தலாம்.அடுத்ததாக உள்ள Drawing Pad மூலம் படங்கள் வரைந்து டொகுயுமென்டுக்குள் நுளைக்கலாம். On-Screen Keyboard மூலம் கீபோட் துணையி‎‎ன்றியே ‏மவுஸை உபயோகித்து ‏இலகுவாக டைப் செய்யலாம். அதேபோல் On-Screen Symbol Keyboard மூலம் விசேட குறியீடுகளை ‏இன்சர்ட் செய்து கொள்ளவும் முடியும்.

விண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்டோஸ் நம்மை ஏமாற்றி விடுவது முண்டு; எரிச்சலூட்டுவதும் உண்டு. ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும் போது அல்லது ஏதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினில் இணைப்ப தற்கான ட்ரைவர் மென்பொருளை நிறுவும்போது திடீரென கணினி நீலத் திரையுடன் இயக்கம் நின்று விடும் அல்லது உறைந்து விடும். பிறகு கணினியை மீள இயக்கும்போது வித்தியாசமான தோற்றத்துடன் டெஸ்க்டொப்பின் நான்கு மூலைகளிலும் Safe Mode எனும் வாசகங்களுடன் விண்டோஸ் பூட் ஆவதைக் காணலாம். இதுவே விண்டோஸின் சேப்மோட் நிலையைக் குறிக்க்கிறது. என்ன இந்த சேப் மோட்?விண்டோஸின் வழக்கமான இயக்கம் பாதிக்கும் வகையில் ஏதேனும் பிரச்சினை தோன்றும் போது விண்டோஸை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு விசேட ஏற்பாடே இந்த சேப்மோட். விண்டோஸை வழமையாக இயங்க விடாமல் பண்ணிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய சேப்மோடைப் பயன்படுத்தலாம். சேப்மோடில் வைத்து பிரச்சினையைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்த பின்னர் கணினியை மீள இயக்கும்போது விண்டோஸ் வழமைபோல் இயங்க ஆரம்பிக்கும்.சேப் மோடில் கணினியை இயக்கும்போது• autoexec.bat, config.sys எனும் பைல்கள் இயக்கப்படுவதில்லை.• அனேகமான டீவைஸ் ட்ரைவர் மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை.




உதராணமாக ப்ரிண்டர் , ஸ்கேனர் போன்ற வன்பொருள் கருவிகளை இயக்குவதற்கான மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை.• கணினியில் பொருத்Aயுள்ள விஜீஏ கார்ட்டிற்கான டீவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக விண்டோஸிலுள்ள வீஜீஏ ட்ரைவரே இயக்கப் படும்.இது போன்ற பல செயற்பாடுகள் சேப்மோடில் முடக்கப்படுன்றன.அத்துடன் Cண்டோஸ் டெஸ்க்டொப் 16 வர்ணங்களுடன் 640 x 480 ரெஸலுயூசனுடனும் நான்கு மூலைகளிலும் சேப்மோட் எனும் வாசகங்க ளுடனும் தோன் றும்.விண்டோசை ஆரம்பிக்கும்போது அது முறைப்படி இயங்க மறுத்திருந்தால் அடுத்த முறை இயக்கும் போது தானாகாவே விண்டோஸ் சேப்மோடில் இயங்கும். அவ்வாறல்லாமல் `நீங்களாகவே சேப் மோடிற்குச் செல்ல வேண்டுமானால் விண்டோஸை ஆரம்பிக்கும் போதே கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் வரும் பூட் மெனுவில் சேப்மோடைத் தெரிவு செய்து சேப் மோடிற்குள் பிரவேசிக்கலாம்.சேப்மோடிற்குள் பிரவேசித்து என்னதான் செய்வது? கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கே சேப்மோடில் நுளைகிறோம். உதாரணமாக, நீங்கள் எதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினியில் புதிதாக இனைத்திருந்தால், கன்ட்ரோல் பேனலில் நுளைந்து அதற்குரிய டீவைஸ் ட்ரைவரை அகற்ற வேண்டும். பின்னர் [பூட் செய்து விண்டோஸ் சரிவர இயங்கினால் அந்த வன்பொருளையும் அதற்கான டீவைஸ் ட்ரைவரையும் விண்டோஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.அதேபோல் ஏதேனுமொரு கணினி விளையாட்டு அல்லது பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது இப்பிரச்சினை தோன்றியிருந்தால் அதற்கும் இதே வழி முறையைக் கையாளலாம். அதாவது கன்ட்ரோல் பேனலில் Add / Remove Programs மூலம் அந்த மென்பொருளை அகற்றி விடுங்கள்.விண்டோஸ் முறையாக இயங்காமைக்கான காரணம் வன்பொருளோ மென்பொருளோ அல்ல என இருந்தால் அனேகமாக விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பழுதடைந்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் விண்டோஸை மீண்டும் புதிதாக நிறுவுவதன் மூலமே நிவர்த்தி செய்யலாம்.

கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்)


பேக்ஸ் சாதனம் (Fax machine) இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்) அனுப்பலாம்.




அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.‏இதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மெ‎‎ன்பொருள்கள் பாவனையிலுள்ளன. விண்டோஸ் எக்ஸ்பியில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் உள்ளி‏ணைக்கப்பட்டுள்ளதால் வேறு மெ‎ன்‎பொருள்களை நிறுவ வேண்டியதில்லை.Windows XP யில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் ஏற்கனவே உள்ளி‏ணைக்கப்பட்டிருந்தாலும் அதனை முத‎ன்‎ முதலில் நிறுவும் போது பேக்ஸ் அனுப்புவதற்குத் தேவையான பைல்கள் நிறுவப்படுவதில்லை. எனவே அதனை நீங்களாகவே install செய்தல் வேண்டும். அதற்குப் பி‎‎ன்வரும் வழி முறையைக் கையாளு‎ங்கள்.முதலில் Start பட்டனில் க்ளிக் செய்து வரும் Start menu ல் Printers And Fax தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில், நீங்கள் ஏற்கனவே பிரி‎ன்டர்கள் இ‏ன்ஸ்டோல் செய்திருந்தால் அதற்கான ஐக்க‎‎ன்களைப் பார்க்கலாம். இப்போது அந்த விண்டோவி‎‎‎ன் இடது பக்கத்தில் இருக்கும் Printer Task எனும் பகுதியில் Setup Faxing எ‎ன்ற கட்டளை இருப்பதைக் காணலாம். அதில் க்ளிக் செய்ய ஒரு Message Box தோன்றி விண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத்துமாறு சொல்லும். அப்போது விண்டோஸ் எக்ஸ்பீ சீடியை உட்செலுத்த, தேவையான பைல்கள் FரA செய்யப்படும். ‏இப்போது பேக்ஸ் சாதனம் போ‎‎ன்ற ஒரு ஐக்க‎ன் அந்த விண்டோவில் வந்திருப்பதைக் காணலாம் .க‎ன்‎‎ட்ரோல் பேனலில் Printer and Fax ஐக்கனைத் திறப்பத‎ன்‎ மூலம் அல்லது Add / Remove Programs ஐக்கனை திறக்க வரும் விண்டோவில் Add or Remove Windows Components தெரிவு செய்வதன் மூலம் வரும் டயலொக் பொக்ஸில் Fax Services தெரிவு செய்து Next க்ளிக் செய்வத‎ன்‎ மூலமாகவும் இதே ‏ இடத்துக்கு வந்து சேரலாம்.‏எவ்வாறு பேக்ஸ் அனுப்புவது? Printer and Fax விண்டோவில் ‏இப்போது Setup A Fax என்ற கட்டளை தோன்றியிருக்கும். அதில் க்ளிக் செய்ய Welcome to Fax Configuration Wizard வரக் காணலாம். அதில் Sender Information ல் உங்கள் விருப்பப்படி விபரங்க¨ளைப் பூர்த்து செய்து Next க்ளிக் செய்யவும். தொடர்ந்து வரும் கட்டத்தில் ‏ Enable Receive, Enable Send இரண்டையும் தெரிவு செய்து மீ‎ண்டும் Next கிளிக் செய்யவும்.அடுத்து TSID யாக உங்கள் பெயரையும் தொலைபேசி ‏இலக்கத்தையும் விரும்பினால் டைப் செய்யுங்கள். ‏‏இதில் டைப் செய்யும் விபரங்கள் மூலம் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவர் அது யாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என அறிந்து கொள்வார். அதேபோல் அடுத்துவரும் CSID லும் ‏இதே விபரங்களை விரும்பினால் கொடுங்கள். ‏இது உங்களுக்கு பேக்ஸ் கிடைக்கப்பெறும் போது அதிலுள்ள விபரங்கள் உங்களுக்கு பேக்ஸ் அனுப்புபவரை அடையும். ‏இப்போது Next கிளிக் செய்ய வரும் Routing Option இல் கிடைக்கப் பெறும் பேக்ஸை விரும்பினால் எந்த பிரி‎‎ன்டரில் அச்சிட வேண்டும் எ‎ன்பதைத் தெரிவு செய்யவும் அல்லது Store a copy in a folder தெரிவு செய்து, கிடைக்கப் பெறும் பேக்ஸ் செய்தியை எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் எ‎ன்‎பதனையும் Browse பட்டனில் கிளிக் செய்து குறிப்பிடவும். பி‎‎ன்னர் Next க்ளிக் செய்ய ‏இந்த Wizard முற்றுப்பெறும். நீங்கள் பேக்ஸ் அனுப்பும் ஒவ்வொரு முறையும் ‏இந்த விசர்ட் வந்து தொல்லை தராது எ‎‎ன்பது ஆறுதலான விசயமாகும்.அடுத்து நீங்கள் அனுப்பவிருக்கும் செய்தியை MS-Word போன்ற ஏதேனுமொரு Word Processor இல் டைப் செய்து கொள்ளு‎ங்கள். பி‎‎ன்னர் பைல் மெனுவில் கிளிக் செய்து அதில் பிரி‎ன்ட் கமாண்டை தெரிவு செய்யவும். அப்போது வரும் பிரி‎‎ன்ட் டயலொக் பொக்ஸில் பிரின்டர் பெயராக Fax தெரிவு செய்வதோடு உங்கள் விருப்பப்படி Print Range தெரிவு செய்து ஓகே செய்யவும்.இ‏ப்போது Send Fax (படம்-1) எ‎‎ன்ற விசர்ட் தோ‎ன்‎‎றும். ‏இங்கு Next க்ளிக் செய்ய Recipient Information (படம்-2) என்ற கட்டத்தில் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவரி‎ன் பெயர், தொலைபேசி இலக்கம் எ‎ன்‎பவற்றை உரிய இடத்தில் டைப் செய்யவும். Use dialing rules என்‎பது தெரிவு நிலையில் ‏இருந்தால் அதனை நீக்கி விடவும். உங்கள் பேக்ஸை ஒ‎‎ன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அ‎னுப்புவதாயின் Add பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொருவரினதும் பெயர் மற்றும் தொலைபேசி இ‏லக்கங்களை டைப் செய்து Next க்ளிக் செய்யவும்.அடுத்த கட்டமாக உங்கள் பேக்ஸ் செய்தியுட‎ன் ‎ ஒரு Cover Page இணைத்து அனுப்ப விரும்பினால் Select a cover page template with the following information (படம்-3) என்பதைத் தெரிவு செய்து தேவையான தகவல் களை டைப் செய்யவும். (எனினும் Cover Page ஐத் தவிர்ப்பது நல்லது) அடுத்து Next க்ளிக் செய்ய Schedule (படம்-4) எ‎ன்‎ற கட்டம் தோன்றும். அதில் எப்போது பேக்ஸை அனுப்ப வேண்டும் எ‎ன்‎பதில் உங்கள் விருப்பம் போல் நேரத்தைத் தெரிவு செய்யலாம். உடனடியாக அ‎னுப்புவதாயின் Now எ‎‎ன்பதையும் Fax Priority யில் Normal எ‎‎ன்பதையும் தெரிவு செய்து Next க்ளிக் செய்ய விசர்ட் இ‏றுதிக் கட்டத்துக்கு (படம்-5) வரும். ‏இங்கு Finish க்ளிக் செய்ய Fax Monitor (படம்-6) எ‎ன்‎ற டயலொக் பொக்ஸ் தோ‎ன்றுவதையும் உங்கள் கணினி நீங்கள் கொடுத்த ‏தொலைபேசி இலக்கத்துக்கு டயல் செய்ய ஆரம்பிப்பதையும் பி‎‎ன்னர் சிறிது நேரத்தில் ‏இணைப்பு கிடைத்ததும் பேக்ஸ் அனுப்பப்படுவதையும் அவதானிக்கலாம். ‏இதேபோல் உங்களுக்கு அனுப்பப்பட்டும் பேக்ஸ் செய்தியைப் பெறுவதானால் Start → Programs → Accessories → Communication → Fax →Fax க்ளிக் செய்ய வரும் விண்டோவிலுள்ள பைல் மெனுவில் Receive a fax தெரிவு செய்யவும். அப்போது பேக்ஸ் மொனிட்டர் தோ‎‎ன்றுவதையும் உங்கள் கணினியில் உள்ள மோடெம் டயல் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். உங்களுக்கு வரும் பேக்ஸ் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். அதனை Fax Console விண்டோவில் inbox கிளிக் செய்து பார்வையிடலாம்.

screen server creator ver.


ஓளிப்படங்களைக் கொண்டு ஸ்க்ரீன் சேவர்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்தான் சைபர்லின்க் மீடியாஷோ.





இது Cyberlink PowerDVD மென்பொருளடங்கிய சீடீயுடன் இணைந்து வருகிறது.
மீடியாஷோ மென்பொருள் மூலம் அழகிய ஸ்க்ரீன் சேவர்களை இலகுவாக உருவாக்கலாம். மைக்ரோஸொப்ட் பவபொயின்டில் பணியாற்றுவது போன்ற அனுபவம் மீடியாஷோவில் கிடைக்கிறது. அனேகமாக எல்லாவிதமான மல்டிமீடியா பைல் வகைகளையும் மீடியாஷோவில் கையாளலாம். ஒளிப்படங்கள், வீடியோ க்ளிப்ஸ், பவபொயின்ட் ப்ரசன்டேசன், ஒலிப்பகுதிகள் எனப் பல்வேறுபட்ட பைல் போமட்டுக்களை மீடியாஷோவுக்கு இம்போட் செய்து அவற்றை விரும்பிய விதத்தில் ஒழுங்கு படுத்தலாம். அத்துடன் அவற்றிற்கு 100 க்கு மேற்பட பலவிதமான டெக்ஸ்ட் இபெக்ட்ஸ் (effects), 2D (Two Dimensional) , 3D ட்ரான்ஸிஸன் இபெக்ட்ஸ், மாஸ்கிங் இபெக்ட்ஸ், மற்றும் சவுன்ட் இபெக்ட்ஸ் என்பவற்றைப் பிரயோகித்து ஒரு மல்டிமீடியா கலவையுடனான ஸ்க்ரீன் சேவராக மாற்றிக் கொள்ளலாம். ஸ்க்ரீன் சேவராக மட்டுமன்றி, .exe பைலாகவோ அல்லது HTML பைலாகவோ கூட மாற்றிக் கொள்ளலாம்.ஒளிப்படங்க¨ளை நேரடியாக ஸ்கேனரிலிருந்து அல்லது டிஜிட்டல் கேமராவிலிருந்து இம்போட் செய்யும் வசதி ஒலிப்பதிவு (sound recording) செய்யும் வசதி மற்றும் வீடியோ கேப்ச்சர் (capture) செய்யும் வசதியையும் கொண்டுள்ளது மீடியா ஷோ. இன்டனெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற வெப் பிரவுஸர்களிலிருந்து ட்ரேக் அன்ட் ட்ரொப் முறையில் படங்களை இலகுவாக இழுத்துப் போடக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.அனைத்துப் பணியையும் பட்டன்கள் மூலமாகவே செய்யக் கூடிய வித்தியாசமான இடைமுகப்பைக் கொண்ட மீடியாஷோவை இயக்கியதுமே ஒரு விசர்ட் தோன்றி நம்மை வழி நடத்துகிறது. மீடியாஷோவுக்குப் புதியவர்களுக்கு இந்த விசர்ட் பெரிதும் உதவும். காட்சிகளைத் தொகுத்தல் (compiling), ஒழுங்குபடுத்தல் (sorting), அவற்றில் தேவையான effects ஐப் பிரயோகித்தல், ஸ்க்ரீன் சேவராகவோ அல்லது .exe பைலாகவோ மாற்றிக் கொள்ளல் என நான்கு கட்டங்களில் நமது பணி நிறைவுபெறுகிறது.மீடியாஷோ மூலம் ஸ்க்ரீன் சேவர் உருவாக்குவதெப்படி? மீடியாஷோவை ஆரம்பித்ததுமே தோன்றும் விசர்ட் மூலம் முதலில் ஒளிப்படங்களையோ வீடியோ காட்சிகளையோ மீடியாஷோ விண்டோவுக்கு கொண்டு வர (import) வேண்டும். அல்லது மீடியாஷோ வின்டோவின் இடது பக்கத்தில் மவுஸை நகர்த்தும் போது தோன்றும் கன்ட்ரோல் பேனலில் இம்போட் பட்டனில் க்ளிக் செய்ய தோன்றும் சிறிய மெனுவிலிருந்து Import Media Files தெரிவு செய்து தேவையான ஒளிப்படங்களை அல்லது வீடியோ க்ளிப்புகளை இம்போட் செய்து கொள்ள வேண்டும். அவை மீடியாஷோ விண்டோவில் சிறிய படங்களாக (Thumbnail pictures) வந்து உட்காரும். அவற்றிலிருந்து விருப்பம்போல் படங்களைத் தெரிவு செய்து கீழுள்ள படச்சுருள் (film) போன்ற அமைப்பிலுள்ள பகுதிக்கு ட்ரேக் அன்ட் ட்ரொப் செய்து படங்களை ஒழுங்கு படுத்த வேன்டும்.அடுத்து Film அமைப்பிலிருக்கும் முதல் படத்தில் இரட்டை க்ளிக் செய்வதன் மூலம் எடிட் மோடுக்குச் செல்லலாம். எடிட் மோடில் வைத்து விண்டோவின் வலது பக்கத்திலுள்ள பட்டன்கள் ஒவ்வொன் றாகத் தெரிவு செய்து transition , text, sound மற்றும் masking effects என்பவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகிக்க வேண்டும். இதே முறையில் film பகுதிலுள்ள ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகத் தெரிவு செய்து effects பிரயோகிக்க வேன்டும். இறுதியாக இடது பக்க மூலையிலுள்ள வீடியோ கேமரா போன்ற ஐக்கனில் க்ளிக் செய்து இதனை ஒரு ஸ்லைட் ஷோவாக இயக்கிப் பார்க்கலாம்.அடுத்து இதனை ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றுவதற்கு மீடியா ஷோ கன்ட்ரோல் பேனலில் எக்ஸ்போட் பட்டணில் க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Screen Saver தெரிவு செய்து எக்ஸ்போட் க்ளிக் செய்ய save as டயலொக் பொக்ஸ் தோன்றும். இங்கு (.scr) பைலாக அதனை சேமித்துக் கொள்ள வேன்டும். சேமிக்கப் பட்ட இந்த பைலை திறக்கும் போது ஸ்க்ரீன் சேவராகத் தொழிற்படும். அத்துடன் அதன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவிலிருந்து நீங்கள் உருவாக்கிய ஸ்க்ரீன் சேவரை கணினியில் இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம்.

virutal pc part -ii


சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம்.மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவிக் கொள்ளலாம்.இங்கு பிரதான இயங்கு தளமான விண்டோஸ் எக்ஸ்பீயில் லினக்ஸின் Ubuntu பதிப்பை வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு நிறுவுவது எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.வேர்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் உங்கள் கணினி ஆகக் குறைந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதாயிருத்தல் வேண்டும். உங்கள் கணினியில் நிறுவியிருக்கும் பிரதான இயங்கு தளம் சிக்கலின்றி இயங்கவும் நிறுவவிருக்கும் ஏனைய வேர்ச்சுவல் இயங்கு தளங்களை சிறப்பாக செயற்படவும் போதிய அளவு நினைவகமும் ஹாட் டிஸ்கில் காலியிடமும் இருத்தல் அவசியம்.






நினைவகத்தின் அளவு அதிகமிருப் பின் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்சுவல் கணினிகளை உருவாக்Bக் கொள்ளலாம்.வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமொன்றை நிறுவத் தேவையான நினைவகத்தின் அளவு ஹாட் டிஸ்க் காலியிடம் என்பவற்றினை அறிந்து கொள்ள பின்வரும் அட்டவணை உதவியாயிருக்கும் என நம்பு கிறேன்.Operating System Memory Hard Disk SpaceWindows 98 Second Edition 64 MB 500 MBWindows 2000 Professional 128 MB 2 GBWindows XP Professional 256 MB 2 GBWindows Server 2003 256 MB 4 GBWindows Vista Ultimate 512 MB 15 GBமுதலில் வேர்சுவல் பீசீ மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவிய பிறகு ஸ்டாட் மெனுவிலிருந்து அதனைத் இயக்குங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Use default settings to create a virtual machine தெரிவு செய்வதன் மூலம் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் தவிர எல்லா செட்டிங்ஸையும் வேர்ச்சுவல் கணினியே நிர்ணயித்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக இரண்டாவது கட்டத்திற்கு வந்து சேரலாம். எல்லா செட்டிங்ஸையும் நீங்களாகக் குறிப்பிட Create a Virtual Machine என்பதை க்ளிக் செய்யுங்கள்.அப்போது தோன்றும் பெட்டியில் வேர்ச்சுவல் மெசீன் பெயரையும் அதனை உருவாக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிடல் வேண்டும். இங்கு Ubuntu என டைப் செய்து அடுத்த கட்டத்திற்கு தாவுங்கள். வேர்ச்சுவல் மெசீனை உருவாக்க வேண்டிய இடத்தைக் குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் உருவாக்கப்படும்.அடுத்து நிறுவவிருக்கும் இயங்கு தளத்தைத் தெரிவு செய்யுங்கள். Ubuntu என்பது விண்டோஸ் அல்லாத இயங்குதளமாதலால் இங்கு Other தெரிவு செய்யுங்கள்.அடுத்து நினைவகத்தின் அளவைக் குறிப்பிடல் வேண்டும் இங்கு வேர்ச்சுவல் கணினி சிறப்பாக இயங்குவதற்கும் அதன் மேல் மேலும் பல பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவவும் அதிக நினைவகத்தை ஒதுக்க வேண்டும். அதற்கு நீங்கள் Adjusting RAM க்ளிக் செய்து நினைவகத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். நினைவகத்தின் அளவைக் கூட்ட அவசிய மில்லை எனின் Using the recommended RAM தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.அடுத்த கட்டத்தில் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை குறிப்பிட வேண்டும். இங்கு A new virtual hard disk என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இங்கு வேர்ச்சுவல் ஹாட் டிஸ்காக rowse பட்டனில் க்ளிக் செய்து ஒரு இடத்தையும் அதற்கான பெயரையும் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் ஒரு பைலை உருவாக்கிக் கொள்ளும். வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் என்பது நிஜக் கணினியில் ஒரு பைலையே குறிக்கிறது.அடுத்து Next க்ளிக் செய்து அடுத்த கட்டத்திற்குத் தாவி Finish க்ளிக் செய்து முடிவுக்கு வரலாம்.இப்போது வேர்ச்சுவல் மெசீனை உருவாக்குவதில் முதல் கட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்னும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளத்தை நிறுவும் பணி பூர்த்தியாகவில்லை.இரண்டாவது கட்டமாக புதிய ஒரு இயங்கு தளத்தை வேர்சுவல் மெசீனில் நிறுவ வேண்டும். இங்கு நாங்கள் Ubuntu பதிப்பை நிறுவப் போகிறோம். இதற்கு உங்களிடம் Ubuntu சீடி இருத்தல் வேண்டும். (இந்த Ubuntu சீடீயை Ubuntu நிறுவன இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப்ப்பதன் மூலம் இலவசமாக வீடு தேடி வர வைக்கலாம்) சீடீ இல்லா விடின் இணையத்திலிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் அதன் பைல் அளவு 600 எம்பீயிற்கு மேல் இருப்பதால் அதிவேக இணைய இ¨ணைப்பிருந்தால் மட்டுமே சாத்தியம். இணையத் திலிருந்து டவுன்லோட் செய்த பைலாயின் அது .ISO இமேஜ் பைல் வடிவிலிருக்கும். எனினும் அதனை சீடியில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.இப்போது Virtual PC Console விண்டோவில் ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ தோன்றி சுவல் மெசீன் பூட் ஆக ஆரம்பிக்கும். ஒரு இயங்கு தளத்தை கணினியில் நிறுவும் போது எவ்வாறு காண்பீர்களோ அத்தனை படி முறைகளையும் இந்த விண்டோவிலும் காணலாம்.வழமையான சிஸ்டம் சோதனைக்குப் பின்னர் பூட்டபல் சீடியை தேட ஆரம்பிக்கும். இங்கு வேர்ச்சுவல் மெசீன் விண்டோவில் CD க்ளிக் செய்து பின்னர் Capture ISO Image என்பதைக் க்ளிக் செய்து .ISO பைலை சேமிக்கப் பட்டிருக்குமிடத்தைக் காட்டி விட வேண்டும்..ISO பைல் அல்லாது சீடியிலிருந்தே நிறுவ வேண்டுமாயின் சீடீயை ட்ரைவிலிட்டு சீடீ மெனுவில் Use Physical Drive க்ளிக் செய்து பின்னர் Action மெனுவில் Reset க்ளிக் செய்து விடுங்கள். இப்போது சீடி ட்ரைவிலிருந்து பூட் ஆக ஆரம்பிக்கும்.இனி வரும் ஒவ்வொரு கட்டமும் வழமையான ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது போன்றதே.

virtual pc -2007

கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர்.அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் பற்றி அற்ந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். லினக்ஸிலும் ரெட் ஹெட், பெடோரா, மென்ரிவா, உபுண்டு எனப் பல நிறுவனங்கள்‎ வெளியிடும் (distributions) பதிப்புகள் உள்ளன.எனினும் ஒரு பய‎ன்பாட்டு மென்பொருளை (application software)நிறுவுவது போ‎‎ன்று ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது என்‎பது எளிமையான விடயம‎ல்ல. கணினித் துறையில் சிறிது அனுபவமும் அறிவும் அதற்கு வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங் களை (duel booting) நிறுவ வேண்டுமானால் க‎ணினி ஹட்வெயர் துறையில் சிறிது கற்றறிந்தவரா யிருத்தல் வேண்டும்.நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸ¤ட‎ன்‎ சேர்த்து நிறுவுவதற்கு உதவவென சில மெ‎ன்‎பொருள் கருவிகள் பய‎ன் பாட்டில் உள்ளன. இவற்றுள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பீசியை குறிப்பிட்டுக் கூறலாம் (Microsoft Virtual PC-2007). வேர்ச்சுவல் பீசீ மெ‎‎ன்பொருள் மூலம் இலகுவாக ஒன்‎றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதுபோன்ற மற்றுமொரு மென்பொருள் கருவி VMware Player. இம்மெ‎ன்‎ பொருள் கருவி வேர்ச்சுவல் பீசியை விட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகவே இணையத்திலிருந்து டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம்.வேர்ச்சுவல் மெசீ‎ன் (virtual machine) எ‎‎ன்பது டுவெல் (duel boot) பூட் அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போ‎ன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ஒ‎ன்‎றுக்கு மேற்பட்ட இ‎யங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே வ‎‎ன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் எ‎ன்பது ஒரு மாயக் கணினி. இதன்‎ மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில், பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும்.. பி‎ன்னர் அத‎ன்‎ மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பய‎‎ன்பாட்டு மென்பொருள் போல் இயங்கும்.ஆங்லகிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருவதைக் குறிக்கும். அதேபோல் இ‎ங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.வேர்ச்சுவல் கணினி என்‎பது ஒரு போலியன ஹாட்வெயர் சாதனங்களையும் போலியான ஹாட்டிஸ்கையும் கொண்ட நிஜமல்லாத ஒரு கற்பனைக் கணினி. வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்படும் இயங்கு தளங்கள் நிஜமாகவே உங்கள் ஹார்ட் வெயர் சாதனத்தில் இயங்குவதில்லை. ஒரு மெ‎‎ன்பொருளே இங்கு ஹாட்வெயர் சாதனம் போ‎‎ன்று இயங்குகிறது. வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது, அந்த இயங்கு தளம் உங்கள் கணினியின் ஹாட் வெயர் சாதனங்களோடு தொடர்பாட முயற்சிக்கும். இவ்வேளைIல் கணினியில் நிறுவியுள்ள வேர்ச்சுவல் கணினி மெ‎ன்‎பொருள், இயங்கு தளம் கேட்கும் கேள்விக்கு நிஜமான ஹாட் வெயர் சாதனம் எவ்வாறு பதிலளிக்குமோ அதே போ‎ன்றே பதிலளிக்கும்.உதாரணமாக வேர்சுவல் கணினி மெ‎ன்பொருள் , உங்கள் கணினி Intel சிப்செட் கொண்ட மதர்போர்டை வைத்திருப்பதாக உணர்த்திவிட்டால், நிஜமாக உங்கள் கணினி மதர்போர்டில் எந்த வகையான சிப்செட் இருந்தாலும் வேர்ச்சுவல் கணினியில் உள்ள இயங்கு தளம் Intel சிப்செட் கொண்ட மதர்போர்டிலேயே தா‎ன் இயங்குவதாகக் கருதும்.வேர்ச்சுவல் மெசீன் என்பதற்கு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லலியிருந்த ஒரு உதாரணத்தை இங்கு தரலாமென என நினைக்கிறே‎ன். உங்களுக்கு ஏதோ ஒரு பொருள் தேவைப்படுBறது. அதனைக் கொண்டுவர உங்கள் வேலையாளிடம் பணி‎க்கிறீர்கள். வேலையாளும் அதை வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ அல்லது கடைத்தெருவிருந்தோ வாங்கி வந்து உங்கள் மு‎ன்‎னே நீட்டுகிறா‎ர். அதனை எங்கிருந்து கொண்டு வரவேண்டும் என நீங்கல் அவரிடம் சொ‎ல்லவில்லை. உங்கள் தேவை நிறைவடைந்தால் போதும். இவ்வாறே வேர்ச்சுவல் கணினியும் தனக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் அல்லது காட்டி விட்டால் அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது எனப் பார்பதில்லை.வேர்ச்சுவல் கணினியானது நம்முட‎ன் தொடர்பாட உள்ளிடும் மற்றும் வெளியிடும் டேட்டாவை அல்லது‎ தகவலை நிஜக் கணினியின் கீபோட், மவுஸ், மொனிட்டர் எ‎ன்பவற்றகற்கே கடத்துகிறது. அவ்வாறே நிஜக் கணினியில் ஒரு யூஎஸ்பீ மவுஸ் பொறுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம். ஆனால் வேர்ச்சுவல் மெசீனில் ஒரு பீஎஸ் 2 மவுஸே பொறுத்தியுள்ளதாக உணர்தப்பட்டுள்ளது. எனினும் யூஎஸ்பீ மவுஸை நாம் நகர்த்த வேர்சுவல் மெசீனில் பிஎஸ் 2 மவுஸை நகர்த்தப்படு வதாகக் காட்டப்படும்.அவ்வாறே வேர்ச்சுவல் கணினில் நிஜ ஹாட் டிஸ்கிற்குப் பதிலாக வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கே பய‎ன்‎ படுத்தப்படுBறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் எ‎ன்பது உண்மை யில் நிஜக் கணினியில் சாதாரன ஒரு பைலையே குறிக்கிறது. வேர்சுவல் கணினி மெ‎‎ன்பொருள், வேர்ச்சுவல் கணினிக்கு அதனை ஒரு நிஜ ஹாட் டிஸ்காகக் காட்டிவிடுகிறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை பாட்டிஸன் செய்யவும் போமட் செய்யவும் கூட முடியும். எனினும் இந்த செயற்பாடுகளை வேர்ச்சுவல் கணினியிலிருந்தே செயற்படுத்த முடியும். நிஜக் கணினியில் இந்த ஹாட் டிஸ்க் எ‎ன்‎பது ஒரு வழமையான பைல் மாத்திரமே.வேர்ச்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் வேர்ச்சுவல் பீசீ மெ‎ன்‎பொ ருளைக் கணினியில் நிறுவ வேண்டும். பி‎ன்னர் வேர்ச்சுவல் கணினி, வேர்ச்சுவல் டிஸ்க் என்பவற்றை உருவாக்கி அவற்றில் இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.வேர்சுவல் பீசீ 2007 எ‎‎ன்‎பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மெ‎‎ன்பொருள். விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் நிறுவத்தக்க வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இம்மெ‎‎ன்பொருளைக் கணினியில் நிறுவிக் கொண்டால் எம்.எஸ்.டொஸ் உட்பட விண்டோU‎ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். மைக்ரோஸொப்ட் தயாரிப்பல்லாத லினக்ஸ் போ‎ன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவலாம்.ஒரு இயங்குதளத்தை கணினியில் நிறுவும் போது பயோஸ் விவரங்களை வாசித்தறிதல், பிரதான நினைவகம்‎ மற்றும் வீ.ஜீ.ஏ நினைவகம் என் பவற்றின் அளவினைப் பரிசோதித்தல், ஹாட் டிஸ்கைக் கண்டறிதல், அவ்வாறே நிறுவிக் கொண்டிருக்கும்போது ஹாட் டிஸ்கை போமட் செய்தல், சிஸ்டம் பைல் பிரதி செய்தல், ரீஸ்டார்ட் செய்தல், கணினி வன்‎பொருள்களுக்கான ட்ரைவர் மென் பொருளை நிறுவுதல் போ‎ன்ற பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். மேற் சொ‎ன்ன அத்தனை செயற்பாடுகளும் வேர்ச்சுவல் கணினியிலும் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது நடைபெறுகிறது. இவை அத்தனையும் ஒரு விண்டோவுக் குள்ளேயே நடைபெறுவது ஒரு புதுமையான அனுபவம்.இந்த வேர்சுவல் பீசீ மெ‎ன்‎பொருளை மைக்ரொஸொப்ட் இணைய தளத்திலிருந்து இல‎வசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம். இதன் பைல் அளவு 32 MB. வேர்சுவல் கணினியை உருவாக்க உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 512 MB அளவாவது நினைவகம் இருத்தல் அவசியம்.