Sunday, July 27, 2008

VISTA mizeer

Hai...... Sitha.....
this is my Destop view
Using Vista




black july 1980

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரங்கள் இடம்பெற்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களது மனதில் அந்த கலவர நிகழ்வுகள் ஆழமான வடுக்களாகப் பதிந்துவிட்டன.






இந்த கலவரத்தால், 500 பேர் முதல் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக மாறுபட்ட தகவல்கள் கூறுகின்றன.
அவற்றுக்கு அப்பால், ஒட்டு மொத்த இலங்கையில் அந்தக் கலவரங்கள் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இவை குறித்து பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத்தின் மூன்று பகுதிகளையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Tuesday, July 22, 2008

goole news

கூகிள் இணையத்தளம் என்பது மிகவும் எளிமையான முறையிலேயே வழமையாக வடிவமைக்கப்படும். ஆனால், கொரியா நாட்டின் கூகிள் தளமானது, அசைவூட்டங்களைக் (Animation) கொண்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகிளின் வழமையான எளிய முறையில் காணப்படும் இணையத்தளத்திற்கு மாற்றமாக அழகிய அசைவூட்டங்கள் கொண்டு கொரியா நாட்டிற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகிளின் பல்வேறு வகையான சேவைகளுக்கு இணைப்புகளை கொண்ட வகையிலுள்ள இந்தத்தளத்தில், சேவைகளைக் குறித்து நிற்கும் பெயர்களுக்கு மேலே, பல வர்ணங்களாலான புள்ளிகள் காணப்படுகின்றன.
இப்புள்ளிகளுக்கு மேலே, மவுஸ் பொயின்டரை (Mouse Pointer) கொண்டு செல்கையில் அசைவூட்டங்கள் இயங்க ஆரம்பிக்கும். அண்மையில் பயனர்கள் தமக்கு விரும்பியது போல், கூகிள் பக்கங்களை அமைத்துக் கொள்ள கூகிள்,
iGoogle எனும் பண்புக்கூறை அதன் முதற்பக்கத்தில் தூண்டலாக்கியதும் (Activate) இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


கூகிள் நிறுவனத்தின் இலவச இணைய அடிப்படையான இலவச மின்னஞ்சல் சேவையான ஜமெயில் சேவையானது, அதன் பயனர்கள் மின்னஞ்சல் மூலம் இணைப்பிகளாக (Attachments) அனுப்பும் கோப்புகளின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.
ஏற்கனவே இச்சேவை மூலம் பத்து மெகா பைட்ஸ் அளவான கோப்புகளையே அனுப்ப முடியுமாயிருந்தது. ஆனால், இப்போது Gmail பயன்படுத்துபவர்கள் இருபது மெகா பைட்ஸ் கோப்புகளையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய நிலையை கூகிள் நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் மூலம் பல புதிய சேவைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் அதேவேளை, அதன் சேவைகள் புதிய முன்னேற்றங்கள், பண்புக்கூறுகள் என்பனவும் தொடர்ச்சியாக அதன் சேவைகளுக்கு சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இணையத்தை ஆளப்போவதென்னவோ, கூகிள் என்பது மட்டும் உறுதியோ!?