இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து என்பது பலருக்கும் தெரிந்த ஒரு உண்மை. தெரியாதவர்கள் இந்த பதிவைப் படித்து தெரிந்துக் கொள்ளவும். சில இணைய தளங்கள் இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே, நன்றாக தெரிகிறது. ஆகையால், சில நேரங்களில் நாம் அதை உபயோகிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க ஃபயர்பாக்ஸ் நீட்சி ”IE TAB" வழிவகுக்கிறது.
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, படத்தில் காட்டியது போல் ”Open this link in IE Tab" என்ற ஆப்சன் சேர்ந்து விடும். ஆகையால் இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே திறக்கும் இணைய தளங்களையும் ஃபயர்பாக்ஸிலேயே பார்வையிடலாம்.
”கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! ” - “நெருப்பு நரி இருப்ப ஐ.ஈ கவர்ந்தற்று!”

No comments:
Post a Comment