Sunday, August 24, 2008

linux

லினக்ஸ் - உபுண்டுவில் வீடியோவை பிடிக்க ஒரு சுலபமான வழியை இணையத்தில் காண நேர்ந்தது,அது கீழ் வருமாறு.இப்ப நீங்க யூடூபில் ஒரு படம் பார்க்கிற்ரிங்க அதை சேமித்து பிறகு பார்க்கவோ அல்லது யாரிடமோ காண்பிக்கவோ சேமிக்க வேண்டும்,எப்படி செய்வது?கீழே உள்ள படத்தை பார்க்கவும்,நான் விஜய் பாட்டை பார்க்கிறேன்... முழு பாட்டையும் உங்கள் பக்கம் கேட்ச் செய்தவுடன்,உங்கள் tmp folder ஐ திறந்து பாருங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் நீங்கள் பார்த்தவீடியோ ஏதோ ஒரு பெயருடன்.அதை அப்படியே காப்பி/பேஸ்ட் முறையில் எங்கு வேணுமா அங்கு போட்டுவிட்டு அதை மறக்காமல் .flv என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்.அவ்வளவு தான்.

FIRE FOX

இப்பொழுதுதான் லண்டனில் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டார். நான் அன்று பட்ட பாடு நினைவுக்கு வந்தது.இந்த பிரச்சனைக்கான அடிப்படைக்காரணம், firefox நிறுவனம், சிக்கலான ஒருங்குறி எழுத்துக்களை கையாள்வதற்கான மென்பொருளான pango வுடனான தொடர்பை இயல்பிருப்பில் துண்டித்துவிட்டிருக்கிறது.ஒவ்வொரு தடவை firefox ஆரம்பிக்கும்போதும் pango வுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட மாட்டாது.இந்த துண்டிப்பு pango இலிருக்கும் வழுவொன்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டதாக செவிவழியாக அறிந்திருக்கிறேன். உண்மை தெரியவில்லை.open suse போன்ற வழங்கல்களில் அவர்கள் pango உடனான தொடர்பை தாமாக இயல்பிருப்பில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் எழுத்துக்கள் இயங்குதளத்தை நிறுவிக்கொண்டவுடனேயே எந்த பிரச்சனையும் இல்லாமல் தெரிகிறது.இப்போது உபுண்டுவில் இதனை நாம் கையால்தான் செய்யவேண்டியுள்ளது./etc/environment என்ற கோப்பினை திறந்து அதில் பின்வரும் ஆணையை சேர்க்கவேண்டும்MOZ_ENABLE_PANGO=1சேர்த்து சேமித்தபிறகு firefox இனை மூடி மறுபடி திறந்தால் தமிழ் எழுத்துக்கள் அழகாக தெரியும்.தீ கீ போன்ற எழுத்துக்களின் விசிறி வித்தியாசமாக இருக்கும். பயப்படவேண்டாம். அது உபுண்டு இயல்பிருப்பாக வைத்திருக்கும் தமிழ் எழுத்துருவின் வடிவம். வழு எதுவுமில்லை. இந்த எழுத்துரு பிடிக்காவிட்டால் வேறு எழுத்துருக்களை firefox அமைப்புக்கள் பகுதிக்கு சென்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.பிறகுதான் கேள்விப்பட்டேன் pango இனை உயிர்ப்பூட்டும் இந்த செயன்முறையை நாம் கையால் செய்ய தேவையில்லை. language-support-ta என்று ஒரு பொதி உபுண்டுவிற்கென இருக்கிறது. அந்த பொது இந்த மாற்றம் உள்ளிட்ட தமிழ் பயனர்களுக்கு தேவையான பல மாற்றங்களையும் அமைப்புக்களையும் தானே செய்துதருகிறது. இதனை நிறுவிக்கொண்டால் போதுமானது.repositories எல்லாம் செயற்படுத்தப்பட்ட பின்னர்,sudo apt-get install language-support-taஎன்ற ஆணையை வழங்கினால் போதும். (இணைய இணைப்பு உள்ளவர்கள்)முன்பொருமுறை வேறொரு நண்பர் இந்த பொதி நிறுவப்பட்ட பின்னரும் தனக்கு தமிழ் தெரியவில்லை என ரொம்ப கவலைப்பட்டார்.

பிறகுதான் கண்டுபிடித்தோம் அவர் பயன்படுத்தியது மெய்யான firefox இல்லை. அதன் மூல நிரலிலிருந்து வேறு ஒரு நிறுவனத்தால் இருமவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் swiftfox என்று.ஆக, swiftfox இல் தமிழ் தெரியாது.

CDMA IT LINUX

இலங்கையில் கொழும்புக்கு வெளியே வாழும் அதிகளவான மக்களிடம் சென்று சேரக்கூடிய செலவு குறைந்த ஒரே ஒரு இணையத்தொடர்பு தொழிநுட்பம், CDMA தொலைபேசி வழியாக இணைப்பை ஏற்படுத்துவதுதான்.கொழும்பிலும் கூட slt தொலை பேசி ஒன்றினை வைத்திருக்காதவர்களுக்கு இந்த தொழிநுட்பமே உதவி புரிகிறது.இலங்கையில் லினக்சை பரந்தளவில் அறிமுகப்படுத்துவதற்கு தடையாக இருந்த காரணிகளுள் முக்கியமானவை இந்த CDMA மோடத்தின் இயக்கிகளை லினக்சில் நிறுவிக்கொள்ளுதல் மற்றும் அதனூடாக அழைத்து இணைக்கும் முறைய விளங்கப்படுத்துதல் சற்று சிக்கலானதாக இருந்தமைதான்.இவ்வளவு காலமும் அங்கொன்று இங்கொன்றாக சில வழிகாட்டிகள் வந்திருந்தாலும், எமது இலங்கை லினக்ஸ் பயனர் குழுமத்தை சேர்ந்த இந்த நண்பர் தயாரித்துள்ள வழிகாட்டி மிக எளிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.இவ்வழிகாட்டி, suntel, lankabel ஆகிய சேவைகள் வழியாக தொடர்பை ஏற்படுத்துபவர்களுக்கானது.

vista

ஆறிப்போன விசயம் தான் என்றாலும், இனியும் ஆற விடாமல் சொல்லிவிடுகிறேன்.பெருங் கருமேகங்கள் எல்லாம் கிளம்பி மனிசர் எல்லாம் பயந்தோடி கடைசியில் மெல்லிய தூறல் போட்டுவிட்டு விஸ்டா சுருங்கிக்கொண்டது.என் தனிப்பட்ட பார்வையில் என் தனிப்பட்ட அனுபவத்தில் மைரோசொஃப்டின் பெருமெடுப்பு வெளியீடு ஒன்று சாதாரண க்னூ/லினக்ஸ் இடம் சண்டையில்லாமல் தோற்று மண்டியிட்ட முக்கிய சம்பவங்களில் ஒன்று இதுதான்.சாதாரண சராசரி பயனர் மட்டத்தில் விஸ்டா மீதான எதிர்பார்ப்பு அதன் இடைமுகப்புப்பற்றிய ஆர்ப்பாட்டங்களால்தான் ஏற்பட்டிருக்கமுடியும்.ஆனால் இந்த இடைமுகப்புப்பற்றிய கதைகள் எல்லாம் இலவம்பழமாய் வெடித்துப்போனது.சராசரிக்கு சற்றே மேலான க்னூ/லினக்ஸ் பயனர் ஒருவருக்கு இந்த விஸ்டா இடைமுகப்புப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்காது. மைக்ரோசொஃப்டின் ஆரவாரங்களைப்பார்த்து சிரிப்புத்தான் வந்திருக்கும்.ஏனென்றால் இந்த "வாவ்" இடை முகப்பை சில வருடங்களுக்கு முன்னரே அவர்கள் விதம்விதமாக லினக்சில் பார்த்துவிட்டார்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் சன் மைக்ரோசொஸ்டத்தின் ஜாவா தொழிநுட்பத்தில் அமைந்த Looking Glass என்ற முப்பரிமாண இடைமுகப்பு லினக்சுக்கு வந்தது. கொஞ்சம் வலுக்கூடிய கணினிகளில் இதனை நிறுவி பயன்படுத்த முடியும்.பின்னர் வலுக்குறைந்த வரைகலை அட்டைகளிலும் சீரிய இடைமுகப்பு ஜாலங்களை காண்பிக்கும் சவாலை நொவெல் நிறுவனத்தின் xgl தொழிநுட்பம் முறியடித்தது. அத்தொழிநுட்பத்தை நொவெல் திறந்தமூலமாக்கியதும் பல்வேறு செயற்றிட்ட முன்னெடுப்புக்களோடு இத்தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியை கண்டது.சாதாரண வரைகலை அடைகளை பயன்படுத்தி மிக அழகான பிரமாண்டமான இடைமுகப்பு ஜாலங்களை AIGL , XGL போன்றன இன்று தரவாரம்பித்துவிட்டன.இதில் அண்மைய வரவு Beryl. இதோ பெரில் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரை!அட்டகாசமான பெரில் இடைமுகப்பை மிக இலகுவாக உங்கள் லினக்ஸ் கணினிகளில் நிறுவி அனுபவிக்கலாம்.

பொன்விழி

நீண்டகாலத்துக்கு முன்பே வெளிவந்ததொன்றாக இருந்தபோதும் நானறிந்தவரை தற்போதும் ஓரளவு வேலை செய்யக்கூடிய நிலையிலிருக்கும் ஒரேயொரு ஒளிசார் எழுத்துணரி (OCR) பொன்விழி தான்.தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்க் கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகக் காலக்கோடொன்றினை உருவாக்கும் பணிகளுக்காக இணையத்தில் தகவல்தேடிக்கொண்டிருந்தபோது. இந்தப்பொன்விழியை மறுபடி ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது.
பொன்விழி ஆரம்பத்தில் நிறையப்பணத்துக்கு விற்கப்படதாக அறிகிறோம். பின்னர் சிடாக் மென்பொருள் தொகுப்பு இறுவட்டில் இது இலவசமாக வழங்கப்பட்டது.தற்போதும் இது மூடிய மூல மென்பொருளே. இதன் உரிம ஒப்பந்தம் குறித்து நான் பயன்படுத்தும் பதிப்பில் எந்தத்தகவலும் இல்லை.ஆனால் எரிச்சல் என்னவென்றால் இம்மென்பொருள் வின்டோசுக்கு மட்டுமே.சரி வந்தால் வா போனால் போ என்று வைன் (WINE) பயன்படுத்தி இதனை எனது க்னூ/லினக்சில் நிறுவிப்பார்க்கலாம் என்று முயன்றபோது, எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அழகாக நிறுவிப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.ஆனால் சற்றே வேகம் குறைவு போல் தோன்றுகிறது. வின்டோசில் இதனை நான் பயன்படுத்திப்பார்த்ததில்லை என்பதால் வேகத்தை ஒப்பிட முடியவில்லை.வைன் கொண்டு பொன்விழியை நிறுவியபின் அதனோடு விளையாடிய அனுபவம் சுவையானது
..1.xsane மென்பொருளைப்பயன்படுத்தி என்னிடமிருந்த புத்தகங்கள் இரண்டின் பக்கங்களை scan செய்துகொண்டேன்.கவனிக்க : greyscale, 300 dpi2.Gimp மென்பொருளைப்பயன்படுத்தி அதனை 1 பிட் கறுப்பு வெள்ளைப்படமாக மாற்றி bmp வடிவில் சேமித்துக்கொண்டேன்.
3.பொன்விழியை இயக்கி, அதன் பட்டியல் பட்டையில் ocr என்பதன்கீழ் recognize என்பதை தெரிவு செய்தேன்.படத்திலுள்ள எழுத்தின் வடிவம் நேரானதா சரிந்ததா என்று கேட்டது. சரிந்தது என்று சொன்னேன். (அநேகமாக புத்தகங்கள் சரிந்த எழுத்தையே கொண்டிருக்கின்றன)4.புதிதாகத் திறந்த சாளரத்தில் என்னுடைய bmp படத்தினை திறந்து recognize என்பதைச்சொடுக்கியதும் நினைத்ததை விட வேகமாக படத்தின் எழுத்துக்களை பிரித்துணர்ந்து கொண்டது.5.பிரித்துணரப்பட்ட உரைப்பகுதியை rtf வடிவில் சேமித்துக்கொண்டேன்.சேமித்த கோப்பினை பின்னர் abiword இல் திறந்து TAM_Maduram எழுத்துருவுக்கு மாற்றினேன். உரைப்பகுதி அழகாகத்தெரிந்தது. ஆனால் ^ குறியீடுகள் குழப்பம் விளைவித்தன.find&replace கட்டளையைப்பயன்படுத்தி அந்தக்குறியீடுகளை ஒரேசொடுக்கலில் நீக்கிக்கொண்டேன்.7.உரைப்பகுதியை நகலெடுத்து சுரதாவின் பொங்குதமிழ் செயலியைப்பயன்படுத்தி ஒருங்குறிக்கு மாற்றிக்கொண்டேன்.----மேலே படங்களில் காட்டப்பட்ட உரைப்பகுதியை விடத் துல்லியமாக எழுத்துணரப்பட்ட கவிதைப்புத்தகம் ஒன்றின் பக்கத்தைக்காட்டும் படங்கள் இதோ.----எழுத்துணர்ந்து ஒருங்குறிக்கு மாற்றியபின் கிடைத்த வெளியீடுகள் இவை. மூலப் படங்களும் தந்திருக்கிறேன். ஒப்பிட்டுப்பாருங்கள். (எந்தவிதமான திருத்தங்களோ மாற்றங்களோ செய்யப்படவில்லை)
இறந்து போன மனைவியுடன் கணவணையும் சேர்த்து எரிக்கும்கிட்டம் இரு வழிகளில் ஆபத்தானது, ஒன்று அவன் ஆண் என்றகாரணத்தாலேயே அவ்வாறு செய்ய முடியாது. இரண்டாவதாக,அவ்வாறு செய்தால் சாதி, வலுவான ஒரு உயிரை இழக்க தேரும்.இவற்றை வீட்ட'£ல்', அவனுக்கு முடிவு கட்டும் இரண்டு இணக்கமான வழிகள் உள்ளன. நான் இணக்கமான வழிகள் என்வ்'குறிப்பிடுவதற்குக் காரணம். குழுவிற்கு அந்த ஆண் ஒரு பெரும்சொத்தாக இகுப்பது தான்.
எதிரி முறுவலுடன்வந்தான்மக்கள்முறுவலுடன்வரவேற்றனர்மண்அங்குலம்அங்குலமாகப் பறிபோனதுஎதிரிபுகழுரைகளுடன்வந்தான்மக்கள்மகிழ்வுடன்வரவேற்றனர்மண்ஏக்கர்ஏக்கராகப் பறிபோனதுஎதிரி பரிசுகளோடு

வந்தான்மக்கள்நன்றியுடன்வரவேற்றனர்மண்சதுரமைல்களாகப் பறிபோனதுமக்கள்விழிப்புற்றபோதுஎதிரிமுனறப்புடன்கையில்ஆயுதங்களுடன்கவசவாகனமேறி வந்தான்மக்கள்ஆயுதத்தரித்த போதுமண்ணைஅபகரித்தவனால்மண்ணைஆளஇயலவில்லைஎதிரி போர்நிறுத்தம் பற்றிப் பேசினான்அமைதி பற்றியும்ஆயுதக்களைவு பற்றியும் பேசினான்மக்கள்போரைநிறுத்திஅமைதி பற்றிப்பேசஆயுதங்களைக்களைந்த பின்மண்மீண்டும் 'அங்குலம்அங்குலமாகஏக்கர்ஏக்கராகச்ணுரமைல்களாப் பறிபோனதுஷி-யின்இனிய சொற்கள்வலியஆயுதங்கலிலுங் கொடியன----எழுத்துணரும் துல்லியத்தைக்கூட்டுவதற்கான வழிமுறைகள் பல உண்டு.நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துரு துல்லியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகப்படுகிறது.