Saturday, June 28, 2008

you tube

அண்மையில் Webby Awards 2007 நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஜுன் 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக இம்மாத தமி்ழ் PC TIMES இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நிகழ்வின் சுவாரஸ்யங்கள் பற்றியும் இதோ எமது வலைப்பதிவின் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம்.
விருது வழங்கல் விழாவில் விருது பெற்றவர்கள் தாங்கள் விருது பெற்றுக் கொண்டதை தெரிவிக்கும் ஏற்றுக் கொண்ட பேச்சு ஐந்து சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென Webby விருப்பம் தெரிவித்திருந்தது.
இதன்படி, வெற்றியாளர்கள் தங்கள் உரையை ஐந்து சொற்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தனர். மிகவும் சுவாரசியமான சொற்களைக் கொண்ட பேச்சுகள் மேடையில் அரங்கேறின.
வெற்றி பெற்ற Ebay ஆனது, தனது பேச்சில் “ஏல விற்பனை 99 சதத்தில் ஆரம்பமாகும்” (”Bidding starts at 99 cents.”) என குறிப்பிட்டது.
அதேபோல், உலகளவில் பிரசித்தம் வாய்ந்த வீடியோ கோப்பு பகிர்வுத்தளத்தின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்ட You Tube இன் ஸ்தாபகர்கள், “You Tube, இரசிகர்களே இது உங்களுக்கானது” (”You Tubers, this is for you.”) என தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.
உலகளவில் 60 மேற்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 8000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்தே விருது வழங்கலுக்கு பொருத்தமான வெற்றியாளர்களன் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ உங்கள் பார்வைக்காக, Webby Awards 2007 நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை எமது வலைப்பதிவூடாக பகிர்ந்து கொள்கிறோம்.

iPhone

Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.
பலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.
இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.
ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.

நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

டிஜிடல் கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவைகளில் பொருத்தப்படும் நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த முதலீடானது, இவ்வருடம் முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது என Sony நிறுவனம் தெரிவிக்கிறது.
Sony நிறுவனமே நிழற்பட உணரிகளின் உற்பத்தியில் ஜாம்பவானத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

கணினிகளின் எண்ணிக்கையானது ஒரு பில்லியனாக அதிகரிக்

2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.
Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.
கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.

கூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

அவுஸ்ரேலியாவின் நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணைக்குழு, கூகிள் நிறுவனம் தமது தேடற்பொறியில் வழங்கும் தேடல் முடிவுகளை சரியான முறையில் வகைப்பிரித்துக் காட்டாமல் பயனர்களை தேவையில்லாத கஷ்டத்தில் ஆழ்த்துவதாகக் கூறி கூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு இணையப்பயனர்களை பொருத்தமற்ற வகையில் வழிகாட்டுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள உலகின் முதலாவது வழக்கு இதுவாகும்.
கூகிள் தேடற்பொறியில் தேடல் மேற்கொள்கையில் பெறப்படும் தேடல் பெறுபேறுகளில், அனுசரனையாளர்களின் இணைப்பும், “சாதாரண” இணையத்தளங்களின் இணைப்பும் காணப்படும். இந்த இரண்டு நிலை இணைப்புகளையும், கூகிள் நிறுவனம் சரியான முறையில் வேறுபடுத்திக் காட்டவில்லை என குறிப்பிடும் அவுஸ்ரேலிய நுகர்வோர் ஆணைக்குழு தெரிவிக்கும் அதேவேளை இதனைத் தடுக்கும் பொருட்டே, தாம் வழக்குத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றது.
இந்த வழக்கின் எதிராளிகளாக கூகிள், கூகிள் அயர்லாந்து மற்றும் கூகிள் அவுஸ்ரேலியா ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த வழக்குத் தொடர்பில் நாம் கடுமையாக எமது பக்க விடயங்களை சொல்லி இதில் வெற்றி பெறுவோம். இந்தக் குற்றச்சாட்டு யாவும் அடிப்படையற்றது” என கூகிள் அவுஸ்ரேலியாவின் பேச்சாளர் Rob Shilkin கருத்துத் தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

vista is not complet. reported by accer

தாய்வானைத் தலைமையாகக் கொண்ட Acer கணினி உற்பத்தி நிறுவனமானது, Windows Vista ஆனது, “மொத்த தொழிற்துறையையே” அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிவித்து, தமது பாவனையிலிருந்து Windows Vista ஐ விலக்கிவிட்டிருக்கிறது.
ஒரு புதிய பணிசெயல் முறைமையானது, கணினி விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், இந்த நிலைமை இந்த வருடத்தின் இறுதி அரையாண்டில் வீழ்ச்சியடையுமென தாம் பலமாக நம்புவதாக உலகின் நான்காவது மிகப் பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான Acer இன் தலைவர் Gianfranco Lanci தெரிவிக்கிறார்.
கடந்த திங்கள் Financial Times Deutschland எனும் இணையத் தளசெய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
“Vista ஐ நிறுவுவதற்காக வேண்டி, யாராவது புதிய கணினிகளை வாங்கியிருப்பார்கள் என நான் நம்பமாட்டேன்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
“நிலைப்பு தொடர்பில் நிறைய பிரச்சனைகள் உண்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பில்லா நெட்வொர்க் குறுப்


மட்/துறைநீலாவணையில் மகா வித்தியாலயத்தில் இயங்கி வரும்பில்லா நெட்வொர்க் குறுப் ஆனது மிக அற்புதமாக தனது நெட்வொர்ககினை பரமரித்த வருகின்றதுஇது பற்றி அதன் தலைவர் திரு க.மிதுரன் என்பவரிடம் வினவினோம் அவர் தற்த பயனுள்ள தகவல்கள் எங்களுக்காப அடுத்த வாரம் வெளியாகும்
அடுத்தவாரம் அவ் இணைய பக்கத்தினை சொடுக்கவும்

Thursday, June 19, 2008

சட்டம் நிபுணர்களதும் நீதவான்களதும்வழக்கறிஞர்களதும் காவற் துறையினரதும் கைகளில்பத்திரமாகவே உள்ளதால்கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால் சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன் சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை அளவோடு குடி என்று செல்லமாய்க் கண்டிக்கநீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது. அதை வைத்திருக்கிறவர்கள் இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்சட்டந் தெரியாதவர்கள் பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு”என்று கண்டித்தார்கள்.
மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால், எவ்வளவு நன்றாக இருக்கும்.
அன்று கொழும்பில் இலங்கைத் தேசியத்தொலைக்காட்சி நிலையத்தில் சட்டத்துக்கு நீதி வழங்கிய தொலைக்காட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரத்த குரலில் தெரிவித்தாகவேண்டியவனாகிறேன்.அதுதான் பொலிசிடம் பாரம்குடுத்தாச்சுத்தானே, அவர்கள் பாத்துக்கொள்ளுவாங்க... இனியென்ன..." என்று ஒரு ரவுடி அமைச்சன் தன் ரவுடிப்பரிவாரங்களுடன் கெஞ்சியபோது, அந்த பாதாள உலகப் பரிவாரங்களையும் கொலைகாரர்களையும் இலங்கைக் காவல் துறையும் சிறப்புப் படையினரும் தொலைக்காட்சித் தொழிலாளர்களிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து வெளியில் கொண்டுவந்தபோது "சட்டத்" தினதும் "சட்ட ஆட்சி" யினதும் போலி முகமூடிகள் "நீதிக்கு" முன்னால் கிழிந்து தொங்கியது.
இலங்கைத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கை அரசினது தொலைக்காட்சி சேவையாகும். ( சிறீ லங்கா ஜாதிக ரூபவாகினி). அரசாங்கமாகப் பதவியிலிருக்கும் நபர்களின் செயற்பாடுகளுக்கும் திட்டங்களும் ஒத்து ஊதுவதே அதன் வேலை. இலங்கை வரலாறு முழுவதும். இன்றைக்கும். அதிலிருக்கின்ற செய்தியாசிரியர்கள் என்பவர்கள், அரசாங்கம் சொல்வதை சிங்களத்தில் செய்திக்காக எழுதிக்கொடுக்கும் வேலையை செய்து சம்பாதிப்பவர்கள். அதை தமிழில் மொழிபெயர்த்து ஓதுவதற்கு அங்கே தமிழ்ச்சேவை ஒன்றும் உள்ளது.அண்மையில் ஆழிப்பேரலை நினைவுக்கூட்டமொன்றில் மெர்வின் சில்வா என்கிற, அரசாங்கத்தின் அமைச்சன் பேசிய பேச்சின் பகுதியொன்றை அரசாங்கத்தின் ஊதுகுழலான "ஜாதிக ரூபவாஹினி" ஒளிபரப்பவில்லை என்பதற்காக இந்த ரவுடி அமைச்சன் ரூபவாகினி நிலையத்துக்குள் நுழைந்து தனது பாதாள உலக அடியாளொருவனைக்கொண்டு செய்தியாசிரியர் ஒருவரைத் தாக்கி இழுத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்.
இதைக்கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் அந்த செய்தி ஆசிரியரைக் காப்பாற்றியதுடன் அங்குள்ள அறையொனில் இந்த அமைச்சனைச் சிறை வைத்து முற்றுகையிட்டு நின்றிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரினதும் முற்றுகையில் சிக்கிய இந்த அதிகார ரவுடிக்கு படிப்படியாக நிலமையின் தீவிரம் புரியவாரம்பித்திருக்கவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் அனைத்து அதிகார வர்க்கக் கூட்டாளிகளையும் உதவிக்கு அழைத்திருக்கிறது.
அதிகாரமும் ஆயுதங்களும் இல்லாத வெறும் ஊழியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் முன்னால் இவையெல்லாம் உதவிக்கு வர முடியவில்லை.
கடைசியில் தனது பாதாள உலக அடியாட்களை அழைத்திருக்கிறது, வந்த "அடியாட்களும்" பயந்து ஓடிவிட்டார்கள்.
அறையொன்றில் குளிரூட்டியும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் வேர்க்க வேர்க்க நின்று மீசையில் மண்ணொட்டாத கதைகளை உளறிக்கொண்டிருந்த இந்த மெர்வின் சில்வா அமைச்சனுக்கும் அவனது பாதாள உலகக் கொலைகாரனுக்கும் சட்டத்தைக்காக்கும் பொலிஸ் படையும், சிறப்பு இராணுவமும் "பாதுகாப்பினை" நல்ல பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் வழங்கிக்கொண்டிருந்த அவலத்தை இலங்கையே நேரடி ஒளிபரப்பில் வெற்றுக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது.இயலாத கட்டத்தில் மன்னிப்பைக்கூட அதிகார எள்ளலோடு இந்த அமைச்சன் கேட்க முயன்றபோது.ஊழியர்கள் சிவப்பு மைய்யால் இவனுக்கு அடித்தார்கள். மூத்திரத்தாலும் அடித்ததாக செய்திகள் கிடைக்கின்றன. அத்தோடு காயப்படுமடியும் அடித்தார்கள் பாருங்கள். அத்தோடு அதிகார வர்க்கம் ஆடிப்போனது. தலையில் ஐந்து தையல் போடும்படியான காயம். ரத்தம் ஒழுக ஒழுக காருக்குள் பயந்து பயந்து இந்த அதிகாரக் குறியீடு குனிந்த தலை நிமிராமல் தஞ்சம் கோரியது கண்கொள்ளாக்காட்சி.---1----
ஜனநாயகம் செத்து நாளாச்சு, ரவுடிகளினதும் துப்பாக்கிகளினது அதிகாரம் ஓங்கியாச்சு. மக்கள் கையில் இனி என்ன இருக்கு, எதுவும் செய்ய முடியாது என்ற சோர்வின் கோட்பாடுகளை மக்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே அதிகாரத்தின் அராஜகங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. நிறுவனங்கள் ஓதுகின்றன.
சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று.
வெறுங்கை ஊழியர்கள் ஒன்றுபட்டு மூத்திரத்தால் அடித்தபோது சோர்வின் கோட்பாடுகள் சோம்பல் முறித்ததை மக்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
ஒரு ரவுடி அமைச்சன் ரதம் ஒழுக ஒழுக பயந்தோடியபோது பாராளுமன்ற ஜனனாயகத்தின் பாதாள உலகப் பூச்சாண்டி கலைவதற்கான கால ரேகைகளை மக்கள் கண்டிருக்கக்கூடும்.
இந்தச்சம்பவம் நாளைக்கு மறக்கப்பட்டுவிடலாம். இந்தச்சம்பவத்தின் பெறுபேறுகள் எல்லாவற்றையும் இதே அதிகாரவர்க்கம் நாளைக்குக் கொன்று புதைத்து விடலாம். ஆனால் சோர்வின் கோட்பாடுகளை நாளயண்டைக்கு இவர்கள் ஓதத்தொடங்கும்போது இந்தச்சம்பவம் ஒரு கூரிய நினைவாக, வெறுங்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக நிற்கப்போகிறது. அதுவொன்றே போதுமானது.
சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. (தமிழ் மக்களுக்கு உணர்த்தும் தேவை இல்லை என்பதால்). சின்னஞ்சிறிய ஒளிப்பொட்டைப்போன்றதொரு சந்தப்பம்.
இலங்கையின் இந்த சம்பவம் உலகெங்கும் இதனை ஒளிப்படங்களாக, நிகழ்படங்களாகக் காட்டும்.
----2----
இந்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.
ஊழியர்கள் ஒன்றுபட்டு வன்முறை வழியாக நீதி வழங்கிய நேர இடைவெளிகளில் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் என்ன செய்திருப்பார்கள்?
மெர்வின் சில்வாவைக் கொலை செய்ய முயன்றதால்தான் இந்த பயங்கரவாதிகள் சுடப்பட்டார்கள் என்று அரசாங்கப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சொல்லுமளவுக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்று பயந்திருப்பார்களா?
பயந்து கமராக்களில் படாமல் ஒளிந்திருப்பார்களா?
இதே சம்பவம் சிரச தொலைக்காட்சி நிலையத்தில் நடந்திருந்தால் எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்?
----3----
ஆனாலும், சிங்கள மக்கள் சிங்கள அதிகாரத்தை எதிர்த்து வன்முறையை தூக்கும்போது, இன்னுமொருமுறை தமிழ்த்தலைமைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினை காப்பாற்றாமலிருக்கட்டும்.
அப்படியான சிங்கள மக்களின் போரட்டங்கள் தங்களுக்ககவும் தான் ஏதோ ஒரு வழியில் நடக்கிறது என்பதை "சிங்கள வெறியர்களை" கண்மூடித்தனமாக எதிர்முனையில் வைப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
----4----
இதற்கு முன் இந்த மேர்வின் சில்வாவினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் மக்களும் அஹிம்சை வழியில், சனனாயக வழியில் எவ்வளவோ போராடிப்பார்த்தனர். இந்த ரவுடியின் கார்களில் ஒன்றின் கண்ணாடியைக்கூட அசைக்க முடியவில்லை.
அடி உதவுற மாதிரி அஹிம்சை உதவப்போவதில்லை.
----5----
இந்த வலைப்பதிவை எழுதி முடித்தபின் எனது ஊடகத்துறை நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அதில் ஒருவர் ரூபவாஹினியில் பணியாற்றுபவர்.
அவர்கள் சொன்ன தகவல்களின் படி,
தமிழ் ஊழியர்களும் சேர்ந்தே போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். பின்வாங்கவில்லை.
செய்தி வாசிப்பாளர்களை முன்னால் வந்து பங்குகொள்ள மற்றவர்கள் விடவில்லை. காரணம், அவர்களது முகங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாதலால் அதனை இவன் பார்த்துவைத்து பிறகு ஏதாவது பழிவாங்கி விடுவான் என்ற அச்சம்.
அத்தோடு பெனாசிர் கொலை விவகாரம் உலக ஊடகங்களின் தலைப்புக்களைப் பிடித்துவிட்டதால் இந்த அருமையான சம்பவம் உலகத்தின் கண்களுக்குப்பட்டுவிடாமல் போய்விடக்கூடும் என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.
---7---
இவளவு பெரிய பாதாள உலகத்தலைவன், அமைச்சன் இப்பிடி பீயாகிட்டானே என்று இரவு உணவுக்குப்போய் வந்த வழியில் சந்தித்த பலரும் சொல்லிக்கொண்டார்கள்
GNUல்(Linux) கணினியில் பாடல் கேட்க
கணினியில் பாடல் ஒன்றினைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாடல் பிடித்துப்போய்விட்டது. பாடலை எழுதியவர் யார் என்ற தகவலை உங்கள் ஒலிச்செயலி (media player) தருகிறது.
சு. வில்வரெத்தினம் எழுதிய பாடல் என்று வைத்துக்கொள்வோமே. உங்களுக்கு அவரைப்பற்றித் தெரியாது. உங்கள் ஒலிச்செயலியின் விசை ஒன்றினைச்சொடுக்கிய உடனே சு. வில்வெரெத்தினம் பற்றிய சகல தகவல்களையும் தமிழிலேயே படங்களுடன் உங்களுக்கு அச்செயலி தருமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
இளையராஜாவின் திருவாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருவாசகம் பற்றியும், இளையராஜா பற்றியும் தகவல்கள அனைத்தையும் பாடல் கேட்டபடி ஒலிச்செயலியிலிருந்தே தமிழில் பெற முடிந்தால் எப்படி இருக்கும்?

முதலாவது, இப்படியான சிறப்பு வசதிமிக்க ஒலிச்செயலியை எந்த இழிச்ச வாய்ச்சியும் வாயனும் உங்களுக்கு இலவாமாகத் தர மாட்டார்கள். அத்தோடு, இப்படி நீங்கள் கேட்கும் பாடல்களின், உரைகளின் கலைஞர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் எவராவது உட்கார்ந்து தமிழில் தட்டெழுதி பராமரித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியே பராமரித்தாலும் நல்லாத்தந்தாங்க போங்க இலவசமா!
அப்படியானால் இந்த வசதி எப்படிக் கிடைக்கும். தோழர் மருதய்யனின் பேச்சைக் கேட்டபடியே அவரைப்பற்றியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் பற்றியும் எப்படித் தமிழில் தகவல் பெறுவது? இலவசமாகவே?
எங்கே தகவல்கள் அனைத்தும் பெருமெடுப்பில் தொகுக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது? எங்கே நீங்களும் பங்குபற்றக்கூடியதாய் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனிதர்களால் இரவுபகலாகத் தகவல்கள் தமிழில் தொகுக்கப்படுகின்றன?
விக்கிபீடியா!இப்பொழுது உங்களுக்குப் பொறிதட்டுகிறதா?
இந்த விக்கிபீடியாவின் தாவல்களை உங்கள் ஒலிச்செயலி உங்களுக்காகக் கறந்து தனது சாளரத்திலேயே தேவையானபடி காட்டினால் மேலே சொன்ன வசதி சாத்தியம் தானே?
தமிழிலேயே விக்கிபீடியா இருக்கும் போது இது தமிழுக்கும் சத்தியம் தானே?
உங்களுக்காகத் தன்னார்வலர்கள் பலர் ஒன்றுகூடி இப்படியான ஒலிச்செயலி ஒன்றினை வடிவமைத்திருக்கிறார்கள்.
அநேகமாக க்னூ/லினக்ஸ் பயன்படுத்தும் இசைப்பிரியர்கள் அனைவரும் நன்கறிந்திருக்கக்கூடிய சிறப்பான இசைக்களஞ்சிய முகாமையாளரும். ஒலிச்செயலியுமான Amarok தான் அது.
அமாரொக், அன்றாடம் கணினியில் இசை கேட்பவர்களுக்குத் தேவைப்படும் சகல வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் இந்தச் சிறப்பு வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உங்கள் மொழியிலேயே விக்கிபீடியாவில் இருந்து தகவல் கறத்தல், பாடல் வரிகளைத் தேடல் என்று ஏராளம் வசதிகள்.
இந்தப்படத்தைப் பாருங்கள். வைரமுத்துவின் பாடலைக் கேட்டபடி அவரைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.இயல்பிருப்பாக ஆங்கில விக்கிபீடியாவிலிருந்தே தகவல்கள் கறக்கப்படுகின்றன. நீங்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாற்றும் முறையைப் படம் விளக்குகிறது.
சரி,
நீங்கள் தேடும் நபர் பற்றியோ அல்லது இசைத்தொகுப்புப் பற்றியோ தகவல்கள் தமிழ் விக்கிபீடியாவில் இல்லாவிட்டால் என்ன செய்வது?
அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும்போது உங்கள் கடமை என்ன/?திறந்த இலவசமான எவருக்கும் உரிமையுள்ள அந்த கலைக்களஞ்சியதுக்கு நீங்கள் தானே தகவல்களை வழங்க வேண்டும்?அது உங்கள் கடமை மட்டுமல்ல. உங்கள் உரிமை.
அமாரொக் இல் இருந்தபடியே நீங்கள் விக்கிபீடியாவில் தகவல்களைத் தட்டெழுதிச் சேர்க்க முடியும்.
படத்தைப்பாருங்க.
சபேஷ் முரளி பற்றி விக்கிபீடியாவில் தகவல் இல்லை. கட்டுரைய உருவாக்கும்படி விக்கிபீடியா கேட்கிறது. நீங்கள் அந்த தொடுப்பை அழுத்தியதும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உலாவியில் புதிய கீற்றில் விக்கிபீடியாவைத் தொகுத்தலுக்கான பக்கம் திறக்கிறது.
இசைப்பிரியரான உங்களுக்கு அந்த இசையமைப்பாளரைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்கும் தானே? தெரிந்ததை தட்டெழுதிச் சேமித்துவிட்டு வாருங்கள்.நாளைக்கு எவருக்காவது, ஏன் உங்களுக்கும்கூடப் பயனப்டும்.
குறிப்பு: இந்த வசதிகள் தமிழில் கிடைக்க வேண்டுமானால் உங்கள் பாடற் கோப்புக்கள் அனைத்தும் தமிழ்ப் பெயருடன் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு பாடல் விபரங்களும் தமிழில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலம் தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் பெறலாம்.

xxx f

Sunday, June 15, 2008

இன்றைக்கு மின்னஞ்சலில் (sajee_26@Rediffmail.comஇத்தளத்துக்கான தொடுப்பு எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவ்விளையாட்டு வின்டோசுக்கானது ஜ(Windows)நான் பாவிப்பதோ (டinux Red Hutஎன்பதோடு தDirectx-10.0 ,Ram.1GB , VGA:256MB ேவைப்படுவதாகவும் இருப்பதால் நிறுவி விளையாடிப்பார்க்கமுடியாதுள்ளது.யாராவது இதனை நிறுவிப்பார்த்துச் சொன்னால் மகிழ்ச்சி. (ஏதாவது ஏமாற்று வேலையோ என்ற சந்தேகம் வேறு எனக்கு. போலியான தளம் ஒன்றை வைத்திருக்கிறார்களோ என்றும் நினைக்கத்தோன்றியது. அப்படியும் நடப்பதுண்டு நடந்தும் உள்ளது.)
நண்பர் m.s.m Sahmilஇதனை நிறுவிப்பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறார் நன்றி ளsamilதொப்பிகலை நடவடிக்கை என்ற பெயரில் புதிய முப்பரிமாணக் கணினி விளையாட்டு இலங்கையில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.தரப்பட்டிருக்கும் நிகழ்படத்தின்படி முழுக்க முழுக்க சிங்களத்தில் அமைந்த இவ்விளையாட்டில் விடுதலைப்புலிகள் பேசும் இடங்களில் தமிழ் உரையாடலும் இடம் பெறுகிறது. விடுதலைப்புலிகள் அவர்களது சீருடையுடனும் குறியீடுகளுடனும் இருக்கிறார்கள். பெண் புலிகள் வேறு.அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் பெரும்பாலான கணினி விளையாட்டுக்கள் மிக மிக ஆழமான அரசியல் நோக்கங்களை உடையன. வெகுமக்களின் உளவியலைத் தீர்மானிப்பதற்காக அமெரிக்க உளவு நிறுவனங்களின் மறைமுக ஆதரவிலேயே பெரும்பாலான இராணுவம் சார்ந்த விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா தனது மூலதன வளம், அதனால் பெற்று வைத்திருக்கும் மூளை வளம் போன்றவற்றைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்களைக்காக்கும் விளையாட்டுக்களை, மென்பொருட்களை உருவாக்குகிறது.ோன்றன Ex.: Red Alert, Age of Empires,IGI ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.சோவியத் யூனியன், மூன்றாம் உலகின் போராட்டங்கள், இஸ்லாமிய அடிப்படைப் போராட்டங்கள் குறித்த அமெரிக்க சார்பான, ஏகாதிபத்திய நலன்களுக்குச்சார்பான சுயநலப்பார்வையினை அணுவணுவாக, மிகச்செறிவாக குழந்தைகள், இளைஞர்கள் மனதில் விதைப்பதே இவ்விளையாட்டுக்களின் முதன்மை நோக்கமாக அமைகிறது. உலகின் மற்றைய பாகங்களில் வாழ்பவர்களுக்கோ இதற்கு எதிராக இதே ஆயுதத்தை கையிலெடுப்பதற்கான மூலதன வளம் போதாது.
இந்த உளவியல் போராட்டத்துக்கென அமெரிக்க முதலாளிகள் கோடி கோடியாக டாலர்களைக் கொட்டுகிறார்கள்.(இந்த உளவியல் போராட்டத்தின் பலிகடாக்களாகி உதிரிகளாக, ஏகாதிபத்திய முதலாளித்துவ சார்பு ஊடகங்களின் வாசகங்களை கேள்விகணக்கற்று ஏற்று ஓதிக்கொண்டு உலகெங்கும் தமிழ்மணி போன்ற பலர் உருவாக்கப்பட்டு நடமாடவிடப்படுகிறார்கள்.)அதிகாரமும், பலமும் கையிலுள்ளவர்களுக்குச்சார்பாகவே தொழிநுட்பமும், எல்லாமும் ஆடுகின்றன. ஆகவே எல்லாவற்றையும்போல, கணினி விளையாட்டுக்களுக்கும் பின்னணி அரசியல்கள் உண்டு.
இலங்கையில் முப்பரிமாண விளையாட்டுக்கள் விருத்தி செய்யபடுவது மகிழ்ச்சிக்குரியதே. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. இது இளைஞர்கள் மத்தியில் இத்தொழிநுட்பம் குறித்த புதிய உத்வேகத்தை உண்டுபண்ணும். ஆனால் இவ்வாறான விளையாட்டுக்களின் பின்னணி அரசியல் எதை உண்டுபண்ணக்கூடும்?இலங்கை மக்களின் எதிர்கால நல வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் இவை எவ்வாறு உதவிடப்போகின்றன? இலங்கைவாழ் அனைத்து இன மக்களின் மனதிலும் நாம் எந்த மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்? இத்தகைய விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. து}ற்றவும் முடியாது. இனி இவை வரத்தொடங்கும். அதுதான் கள யதார்த்தம். எதிர்கொள்ளும் வழிமுறைகளை ஆராய வேண்டும்.
இலங்கை இராணுவத்தின், அதிகாரத்தின் நலன் நோக்கிய இப்படியான விளையாட்டுக்கள் தொடர்ச்சியாக வருமிடத்து என்ன செய்யப்போகிறீர்கள்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். தோழர் மெத்தவிகாரியுடன் இலங்கையில் முப்பரிமாண விளையாட்டுக்களை உருவாக்க வேண்டிய தேவை, சாத்தியங்கள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். அவற்றைப்பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் விளையாட்டுக்களின் அதிகார நலன்களுக்கு எதிரான ஆரோக்கியமான சிந்தனைகளை நமது குழந்தைகளின் மூளைகளில் எப்படி விதைக்க முடியும் என்ற எனது பார்வையினைத் தெளிவு படுத்திக்கொண்டிருந்தேன்.
சிங்களத்தில் ஆழமான அழகான கதைப் பாரம்பரியம் ஒன்று உண்டு.சிறு சிறு கதைகள் குவியலாய், புதையலாய் சிங்களத்தில் இருக்கிறது. தேவதைக்கதைகள், இதிகாசக்கதைகள், நகைச்சுவை என ஏராளம். இவைகளிலிருந்து பெறத்தக்க ஆழமான ஆரோக்கியமான அடிப்படையினைக்கொண்டு நாம் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களை விருத்தி செய்யலாம் என்றேன்.
போருக்கெதிரான, பழிதீர்க்கும் உளவியலுக்கு எதிரான மாற்று உளவியல் அபிவிருத்தியை து}ண்டக்கூடிய "பிரபல' விளையாட்டுக்களை நாமும் உற்பத்தி செய்வதுதான் காலம் எமக்குத் தந்துள்ள கடமை என்று எமது உரையாடல் தொடர்ந்தது.
எம்மிடம் இதற்கெல்லாம் பணம் இல்லை. அரசாங்கத்திடம் விண்ணப்பித்தால் அவர்கள் எவ்வளவு து}ரம் உதவி செய்வார்கள் என்று தெரியவில்லை. பவுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு, மக்கள் சார்ந்த அரசியலை அடிப்படையாகக்கொண்டு விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன்.
அவரும் அதையே விரும்பினார்.மெத்தவிகாரி மிகுந்த ஆர்வமாக இருந்தார். இதற்குரிய தொழிநுட்பவியலாளர்கள் யாரை எல்லாம் அழைத்து உதவி கேட்கலாம் என்று ஒரு தொழிநுட்பவியலாளரான அவர் சிந்திக்கத்தொடங்கினார்.
view my compleate Profiles

சிங்கள முப்பரிமாண கணணி விளையாட்டுoperation of THOPIGALA(தொப்பிகல நடவடிக்கை)