Monday, April 20, 2009

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்


எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?

1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.

2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.

3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.

4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

அதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலும் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா!

1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.

2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.

3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா? வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா? வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா? என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்

No comments: