Sunday, October 11, 2009

பாண்ட்விட்த் உபயோகத்தை கட்டுபாட்டுக்குள் வைக்க

இந்தியாவில் வழங்கப்படும் பிராட்பேண்ட் திட்டங்கள் பெரும்பாலும் பாண்ட்விட்த் கட்டுப்பாடுடன் வருகின்றன. அதிக விலை கொடுத்தாலும் Unlimited திட்டங்கள் என்னை போன்ற இணைய விரும்பிகளுக்கு உபயோகமாக இருந்தாலும் பெரும்பாலானோர் பாண்ட்விட்த் கட்டுப்பாடுடன் உள்ள திட்டங்களை உபயோகபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் தங்களுடைய பாண்ட்விட்த் உபயோகத்தை கணக்கிடுவதில் குழப்பங்கள் இருக்கலாம். பிராட்பேண்ட் வந்த புதிதில் அறியாமல் அளவுக்கு அதிகமாக பாண்ட்விட்த் உபயோகித்து உபரி கட்டணமாக ஏழாயிரம் கட்டிய அனுபவம் எனக்குண்டு.

Bitmeter என்ற இலவச மென்பொருள் கணினியில் இணைய பாண்ட்விட்த் உபயோகத்தை கணக்கிட உதவுகிறது. இதன் மூலம்

1. இணைய இணைப்பின் ஏற்ற (upload) / இறக்க (Download) வேகங்களை கணக்கிட முடியும்.

2. இணைய
பாண்ட்விட்த் உபயோகிப்பினை மணி, நாள், மாத அளவில் கணக்கிட்டு கொள்ள முடியும்.


3. பாண்ட்விட்த் கட்டுப்பாடு உள்ளவர்கள் பாண்ட்விட்த் உபயோகம் குறிப்பிட்ட அளவை மீறும் போது அலெர்ட் செய்தி தரும்படி அமைத்து கொள்ளலாம். உதாரணத்திற்கு மாதாந்திர பாண்ட்விட்த் கட்டுப்பாடு அளவு 20 GB என்றால் அதில் 90% உபயோகத்தை மீறும் போது அலெர்ட் தரும்படி அமைத்து கொள்ளலாம்.

மேலும் பல வசதிகள் உள்ளன. விபரங்கள் அறிய இந்த பக்கத்தை http://codebox.no-ip.net/controller?page=bitmeter2 பார்க்கவும். தரவிறக்க இந்த லிங்க்கிற்கு செல்லவும்.

இந்த மென்பொருள் இலவசம். இதன் மூலம் உங்கள் பாண்ட்விட்த் உபயோகத்தை உரிய முறையில் திட்டமிட்டு கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்.

ஒரே நேரத்தில் பல இணைய கணக்குகளை அணுகுவது

பெரும்பாலும் நாம் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் முகவரி வைத்து இருப்போம். மெயில் வாசிக்கும் போது ஒவ்வொரு மெயில் முகவிரியில் லாகின் (login) செய்து அடுத்த முகவரிக்கு செல்ல logout செய்து மீண்டும் புதிய முகவரிக்கு செல்ல வேண்டி வரும்.

உதாரணமாக நான் ஜிமெயிலில் firstaccount@gmail.com, secondaccount@gmail.com என்று இரண்டு முகவரிகள் வைத்துள்ளதாக கொள்வோம். நான் இரண்டு முகவரியிலும் உள்ள மைல்களை படிக்க ஒவ்வொன்றாக தனித்தனியாக login & logout செய்யவேண்டும். இரண்டு மெயில் முகவரியிலும் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது . ஏதாவது ஒன்றில் மட்டுமே செயல்பட முடியும். மற்றொன்றிற்கு செல்ல வேண்டும் எனில், ஏற்க்கனவே திறந்துள்ள மெயிலை logout செய்து விட்டு புதிய முகவரியில் login செய்ய வேண்டும்.

இந்த பின்னடைவை போக்கும் இதனை போக்கும் வகையில் Internet Explorer 8 -ல் ஓர் வசதி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் புதிய Session திறக்க வேண்டும்.


புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோ திறக்கும். இப்போது இரண்டு விண்டோ க்களிலும் தனித்தனியாக வெவ்வேறு ஈமெயில் முகவரிகளின் மூலம் லாகின் செய்து உங்களால் செயல்பட முடியும்.


பயர்பாக்ஸ் இணைய உலாவியில் இந்த வசதியை பெற இந்த பயபாக்ஸ்நீட்சியை (Firefox Extension) உபயோகிக்கவும்.

இது ஈமெயிலுக்கு மட்டுமே ஆனதல்ல. நீங்கள் பல உறுப்பினர் கணக்குகள் வைத்துள்ள எல்லா தளங்களிலும் இது போன்று செயல்பட முடியும்.

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.


Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.


அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்

இந்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்கள் ஏதும் இருந்தால் தயங்காமல் கேட்கவும். வேறேதும் மென்பொருள், கணினி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றாலும் பின்னூட்டத்தில் கேட்கவும். உதவ முயல்கிறேன்.

ஜிமெயிலில் புதிய எமோஜி ஐகான்கள்

'ஸ்மைலி' . பதிவுகளிலும் , சாட்டிலும் நாம் அறிந்த வார்த்தை. நமது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த அடையாள படங்களை உபயோகப்படுத்தி வருகிறோம். கூகிள் தனது ஜிமெயில் குறைவான எமோசனல் ஐகான்களயே கொண்டிருந்தது. இப்போது அதிகமாக எமோசனல் ஐகான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எமோஜி ஐகான்களை (Emoji Icons) ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஜிமெயிலில் புகுத்தி உள்ளனர்.

இதனை உங்கள் ஜிமெயிலில் தோன்ற செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை செய்யுங்கள்.

ஜிமெயிலில் மேலே உள்ள Settings கிளிக் செய்யுங்கள். பின்பு Labs கிளிக் செய்யுங்கள்.

Extra Emoji என்பதனை Enable செய்து கொண்டு Save Changes கிளிக் செய்யவும்.


இனி நீங்கள் புதிய ஈமெயில் எழுதும் போது புதிய எமோஜி எமோசனல் ஐகான்களை உங்கள் மெயிலில் இட்டு கொள்ளலாம்.


USB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள்


உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனால், அதனை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்வது பற்றிய பதிவு இது.
சென்ற மாதம் என்னுடைய யுஎஸ்பி டிரைவை தொலைத்து விட்டேன். மிக முக்கியமான கோப்புகளுடன், கடந்த ஆறுமாதமாக சேகரித்த மென்பொருள்கள் அதில் இருந்தன. சிறிய பொருள் ஆதலால் எங்கோ விழுந்து விட்டது. சென்ற இடங்களுக்கெல்லாம் தொலைபேசியில் கேட்டேன். இல்லை என்ற பதில் தான் வந்தது.

நல்லவர் எவரேனும் எடுத்து இருந்து அதை உரியவரிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்து இருந்தாலும் என்னை பற்றிய தகவல்கள் அதில் இல்லை. தொலைந்தது தொலைந்துதான்.

அடுத்து ஒரு புதிய யுஎஸ்பி டிரைவ் வாங்கினாலும், எனது தொடர்பு தகவல்களை அதில் தெரிவிக்க வழி தேடினேன். யுஎஸ்பி டிரைவை கண்டெடுப்பவர் உபயோகிக்கும் போது எனது தொடர்பு தகவல்கள் அவர் கண்ணில் படும்படி இருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ள வழி உண்டு. இணையத்தில் அதற்கு தீர்வாக குட்டி மென்பொருள்கள் கிடைத்தன.

அவற்றை உங்கள் யுஎஸ்பி டிரைவில் நிறுவினால், யுஎஸ்பி டிரைவை திறக்கும் போது உங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து விடும்.

இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் மூன்று கோப்புகள் இருக்கும்.

readme.txt கோப்பை திறந்து உங்களை பற்றிய தகவல்களை அதில் கொடுக்கவும். பின்பு இந்த மூன்று கோப்புகளையும் உங்கள் யுஎஸ்பி டிரைவுக்கு மாற்றவும். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல் தோன்றும்.


உங்களை பற்றிய தகவல்கள் இதனை விட சிறப்பாக தோன்ற வேண்டும் என்று எண்ணினால் சற்றே மேம்படுத்தபட்ட இந்த மென்பொருளை இங்கே கிளிக்செய்து தரவிறக்கி கொள்ளுங்கள் . ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் 5 கோப்புகள் இருக்கும்.

contactme.jpg கோப்பில் உள்ள படமே உங்களை பற்றிய தகவலாக தோன்றும். அதனை எடிட் செய்து கொள்ளுங்கள்.

autosplash.ini கோப்பில் உள்ள தகவல்களை மாற்றுவதன் மூலம் தோன்றும் செய்தி விண்டோவின் உயரம், அகலம், எத்தனை வினாடிகள் தோன்ற வேண்டும் என்பனவற்றை மாற்றலாம்

[General]
Title=Help! I'm Lost
ShowTitle=False
ImageFile=contactme.jpg
ImageWidth=550
ImageHeight=250
ShowTime=5

எடிட் வேலைகள் முடிந்தவுடன் இந்த ஐந்து கோப்புகளையும் இங்கள் யுஎஸ்பி டிரைவிற்கு மாற்றி விடுங்கள். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல்கள் சில வினாடி தோன்றி மறையும்.


யுஎஸ்பி டிரவின் மீது மௌஸ் வலது கிளிக் செய்து "Explore" கிளிக் செய்வதன் மூலம் யுஎஸ்பி டிரைவில் உள்ள கோப்புகளை பார்வையிடலாம்.

இதன் மூலம் உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனாலும் அதை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

அவர் உங்களை தொடர்பு கொண்டு யுஎஸ்பி டிரைவை உங்களிடம் ஒப்படைப்பார்... அவர் ரொம்ம்ம்ப நல்லவராய் இருந்தால் மட்டுமே...

கணினி மென்பொருட்களின் கூடம்

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில்

நண்பர்களே சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழி அறிந்திருப்பீர்கள். அது போல சிறு மென்பொருளும் உங்கள் கணிணியை பாதுகாக்கும்.

உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு பெரிய கோப்பினை தரவிறக்கம் செய்கிறீர்கள். அது தரவிறக்கம் ஆகும் வரை உங்களால் காத்திருக்க முடியாது உங்களுக்கு பல வேலைகள் இருக்கும்.கணிணியை அணைக்கவும் வேண்டும் தரவிறக்கமும் முழுதாக முடிய வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த ஆடு ஆன் கை கொடுக்கும். சுட்டி





இது தரவிறக்கம் முடிந்தவுடன் ஒலி கொடுக்கும் பிறகு கணிணியை அணைக்கத்துவங்கும்.


கணிணிக்கு கேடு விளைவிக்கும் ஆபாச தளங்களுக்கு செல்வதை தடுக்க இந்த ஆடு - ஆன் உதவும். சுட்டி இந்த ஆடு ஆன் மூலம் ஆபாச தளங்கள் உங்கள் குழந்தைகளை தவிர்க்கலாம்.






உங்கள் கணிணியில் டாட் நெட் பிரேம்வொர்க் எந்த பதிப்பு நிறுவப்பட்டுள்ளது தெரிந்து கொள்ள உதவும் ஒரு சிறு மென்பொருள் சுட்டி





உங்கள் கணிணியில் உள்ள தற்காலிக டெம்ப் கோப்புகளை அழிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி


விண்ஜிப் போன்ற ஒரு மென்பொருள் 7ஜிப் என்பதாகும். இது பலவகையான சுருக்கப்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது. இந்த மென்பொருளினால் சுருக்கப்பட்ட கோப்புகள் 7zip என்று இருக்கும். இதே மென்பொருள் இதை விரிக்கவும் தேவைப்படும். அது போல் இல்லாமல் இதை ஒரு EXE கோப்பாக அனுப்பினால் அந்த மென்பொருள் தேவையில்லை. இந்த 7zip கோப்பினை EXE கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் சுட்டி




யூட்யூபினுள் படம் பார்த்தால் சிறு பெட்டியுனுள் படம் தெரியும் அது போல் இல்லாமால் திரை முழுவதும் பார்க்க பெரிது படுத்தி பார்த்தால் அதனுடைய தரம் நன்றாக இருக்காது. திரை முழுவதும் அதே தரத்துடன் யூட்யூப் வீடியோவினை பார்க்க இந்த ஆடு - ஆன்


நம் கணிணியில் அடிப்படையான சில மென்பொருட்களை தரவிறக்க ஒவ்வொரு முறையும் தரவிறக்க ஒவ்வொரு தளங்களில் சென்று தரவிறக்க வேண்டியிருக்கும் அது போல் இல்லாமல் ஒரு மென்பொருள் வழியாக நமக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் நிறுவ இந்த மென்பொருள் உதவும். சுட்டி




இதுவரை பின் தொடரும் தொடரப்போகும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இதுவரை 194 பாலோயர்கள் என்னை பின் தொடர்கின்றனர். இது என்னுடைய 295வது பதிவு 300வது பதிவு எழுதும் முன் என்னை பின் தொடர்பவர்கள் 300 ஆக வேண்டும் என்பது விருப்பம்.