Thursday, July 22, 2010

விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் ஆரம்ப காலங்களில் எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு பார்வை.



செப்டம்பர் 1981 ஆண்டு Interface Manager என்ற பெயரில் துவங்கப்பட்ட ப்ராஜெக்ட் 1983 ஆண்டு Microsoft Windows என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1985 ஆண்டு Windows 1.0 பதிப்பு வெளியிடப்பட்டது.


இது DOS இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ஒரு GUI அப்ளிகேஷன் ஆக வடிவமைக்கப் பட்டிருந்தது. இதற்கு முன்னர் Ms-Dos -ல் Command டைப் செய்து பணிபுரிந்து வந்தவர்களுக்கு, இதில் மெளசை பயன்படுத்தி அப்ளிகேஷன்களை இயக்கும் முறை அனைவரை கவருவதாக இருந்தது.

மைக்ரோசாப்ட் - இன் முதல் மெளஸ் Steel Ball உடன்..


இந்த Windows 1.0 வின் Installation பொதிகள் அனைத்தும் Floppy Disc களிலேயே வெளியிடப்பட்டன. இடையில் ஒரு Floppy disc பிரச்சனை என்றாலும் இதனை நிறுவுவது சிரமமான காரியமாகிவிடும்.


Windows 1.0 வின் Interface Screen..


இது பிரபலமான Apple - Mac இயங்குதளத்தை ஒத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதிலுள்ள Menu bar குறிப்பாக Special menu மற்றும்


Apple நிறுவனத்தின் MacPaint, MacWrite ஆகிய பயன்பாடுகள் மைக்ரோசாப்ட் தயாரிப்பில் Write மற்றும் Paint ஆக காப்பியடிக்கப் பட்டிருப்பதாக புகார் எழுந்தது.


Windows 1.0 பதிப்பு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை, இந்த பதிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு பயன்பாடு Aldus Pagemaker மட்டுமே. நவம்பர் 1, 1987 -ல் Windows 2.0 பதிப்பு வெளியிடப்பட்டது.

Windows 2.0


இது மேலும் அதிர்ச்சியை Apple நிறுவனத்திற்கு ஏற்படுத்தியது. முன்னதாக 1985 ஆண்டு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தில், ஆப்பிள் OS -இன் தோற்ற வடிவத்தை Windows 1.x பதிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் உரிமம் ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தது.



ஆனால் Windows 2.0 பதிப்பின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு அச்சு அசலில் அப்படியே Apple Mac ஐ ஒத்திருப்பதை அடுத்து Visual Displays இற்கான Apple நிறுவனத்தின் காப்பி ரைட்டை மீறிவிட்டதாக 1988 ஆண்டு Macintosh நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.



இது ஒரு புறம் இருந்தாலும், 1990 இல் கணினி பயனாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Windows 3.0 பதிப்பு வெளியாகியது. இதிலிருந்த Program Manager, File Manager மற்றும் Print Manager ஆகியவை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. ஐகான்களும் அனைவரையும் கவரும்படியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. (இதை கலர் மானிட்டரில் பார்ப்பதற்காக கோவை சென்று ரூம் போட்டு தங்கி CCIT யில் பார்த்து பிரமித்து, நாள் முழுக்க இனிய நண்பர்கள் CAD Ramesh மற்றும் DOS Ramesh உதவியோடு Solitaire game விளையாடி மகிழ்ந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.)



படங்கள் மற்றும் தகவல்கள் Google மூலம் பெறப்பட்டது..
.

No comments: