Thursday, July 22, 2010

புகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக பெரிதாக்க

நம்மிடம் உள்ள புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழக்கமாக நாம் பெரிதாக்க முயற்சி செய்கையில், அதனுடைய resolution பாதிக்கப்படுவது இயல்பு. சில சமயங்களில் நமது மொபைல் போன்களில் எடுக்கும் படங்களை பெரிதாக்கி பிரிண்ட் செய்யும் பொழுது படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கலாம்.


நமக்கு தேவையான அளவில் படங்களை பெரிதாக்க ஒரு இலவச மென்பொருள் SmillaEnlarger (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த மென் பொருள் கருவிக்கு installation தேவையில்லை. தரவிறக்கி unzip செய்தபிறகு SmillaEnlarger ஃபோல்டருக்குள் உள்ள SmillaEnlarger.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது.

கீழே உள்ள படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை இந்த கருவியை பயன் படுத்தி எப்படி பெரிதாக்குவது என்று பார்ப்போம்.


SmillaEnlarger -இல் இந்த கோப்பை திறந்த பிறகு, இடது புறமுள்ள Output Dimensions பகுதிக்கு சென்று தேவையான அளவு - மாற்றங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


இப்பொழுது cropping பேனில் படத்தில் ஒரு சிறிய பகுதியை தேர்வு செய்தவுடன்,

Thumbnail preview -இல் அந்த சிறிய பகுதி பெரிதாக, நாம் கொடுத்துள்ள அளவிற்கு தெளிவாக தெரிவதை கவனிக்கலாம்.
Enlarger Parameters பகுதியில் sharp, paint போன்ற வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.


இதில் பல புகைப்படங்களை ஒரே சமயத்தில் கையாளும் வசதியும் உள்ளது.


No comments: