Thursday, July 22, 2010

விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா ?

விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் பதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன.

முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறியுஅ முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.


இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும்.


சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.


இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும்.

மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.

No comments: