Thursday, July 29, 2010

கவிதை கேளுங்கள்;அழைக்கும் இணையதளம்.



நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர்.

கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல கவிதைகளை கேட்கச்செய்வதற்கான இணையதளமாக இது அமைகிறது.

கவிஞர்கள் இந்த தளத்தில் தங்களது கவிதைகளை தங்கள் குரலிலேயே வெளியிடலாம்.

இதற்காக கவிஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து தங்கள் கவிதையை வாசிக்க வேண்டியது தான்.கவியரங்கத்தில் பாடுவது போல ஏற்ற இறக்கத்தோடு உண‌ர்வு பொங்க‌ க‌விதை வாசிக்க‌லாம்.

அத‌ன் பிற‌கு இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் க‌விதை வாசிப்பை அழ‌காக‌ ஒலிப்ப‌திவு செய்து அத‌ற்கென‌ த‌னி முகவ‌ரியையும் உருவாக்கி த‌ருகிற‌து.அந்த‌ முக‌வ்ரியை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி வைத்து க‌விதையை கேட்டு ம‌கிழ‌ செய்ய‌லாம்.

ஆனால் ஒன்று அது உண்மையிலேயே க‌விதையாக‌ இருக்க‌ வேண்டும்.இல்லையென்றால் ந‌ண்ப‌ர்க‌ளின் பாடு திண்டாட்ட‌ம் தான்.

அமெரிக்காவை மைய‌மாக‌ கொண்ட‌ த‌ள‌ம் என்ப‌தால் போன் க‌ட்ட‌ண‌ம் ம‌ற்றும் ப‌ய‌ன்பாட்டில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வும்.

http://www.ringpoem.com/

No comments: