Tuesday, September 15, 2009

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
Posted: Fri, 28 Aug 2009 04:55:40 PDT
நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர் கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில் உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும் மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம் அக்கவுண்டிலிருந்து Logout அல்லது Sign Out செய்ய வேண்டும்.நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு வெளியே செல்லக்கூடாது. சில நேரம் செல்பேசி அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன் அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும் செல்லக் கூடாது.நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள், (Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து விடுங்கள். முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது மிகவும் நல்லது உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும்.

No comments: