Sunday, June 20, 2010

கணனியின் நினைவகத்தை(RAM) மேம்படுத்துவது எப்படி.

கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர்.

கணிப்பொறி பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பணியை விரைவாகச் செய்து முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்குக் கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாகச் செயல்படுவது "ரேம்' (RAM) ஆகும்.

இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களைப் பிராசசர் தேடாமல் விரைவாகப் பணிகளைச் செய்து முடிக்கிறது. ஹார்டு டிரைவ் என்பது கணிப்பொறியில் தகவல்களை மென்பொருள்களை முழுமையாகப் பதிவு செய்து எந்த நேரத்திலும் கவனமாக பாதுகாப்பதாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது அதன் இயக்கத்திற்குத் தேவையான கட்டளைகளை தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுவதே ரேம் நினைவகம்.

No comments: