Sunday, June 20, 2010

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்


சுருக்க குறியீடுகளை அறிய...

எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்
தள முகவரி : http://www.acronymfinder.com/

விண்டோஸ் நுட்பங்கள் அறிய...

பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/

Beta பதிப்புகளை அறிய...
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/

இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/

தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி

ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு...

கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/

No comments: