Thursday, January 15, 2009

DILL FILES INFORM

DLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு எப்லிகேசன் மென்பொருளொன்றினால் தேவையேற்படு மிடத்து அதனை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும். விண்டோஸில் ஏராளமான DLL பைல்கள் பயன்பாட்டில் உள்ளன. அது தவிர ஒவ்வொரு எப்லிகேசன் மென்பொருளும் அதற்கேயுரிய DLL பைலகளையும் கொண்டிருக்கும். ஒரு DLL பைலை பல எப்லிகேசன் மென் பொருள்கள் ஒரே நேரத்திலும் பயன் படுத்தி கொள்ளும் ஒரு DLL பைல் .dll எனும் பைல் நீட்டிப் பைக் கொண்டிருக்கும்..ஒரு ப்ரோக்ரமை செயற்படுத்து (execute) முன்னர் அதற்குத் தேவையான பைலகள் மற்றும் அதன கூறுகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு தொகுத்த பின்னரே அந்த ப்ரோக்ரம் செயற்படுத்தப்படும். எனினும் DLL பைலக்ள் தேவையேற்படும்போது மாத்திரம் மெமரியில் ஏற்றப்பட்டு பயன்படுத் தப்படும். DLL பைல்களின் இந்த விசேட தன்மையால் நினைவகத்தில் இடத்தைச் சேமிக்க முடிகிறது.உதாரணமாக எம்.எஸ்.வர்டில் ஒரு ஆவணத்தை டைப் செய்து கொண் டிருக்கும் போது ப்ரிண்டருக்குரிய DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்பட மாட்டாது. நீங்கள் அந்த ஆவணத்தை அச்சிட அரம்பிக்கும்போது ப்ரிண்டர் DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்படும். DLL பைல்களை கணினியிலிருந்து அழிக்க முயற்சிக்க வேண்டாம். முக்கியமான ஒரு DLL பைலை அழித்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். விண்டோஸ் குறித்த இந்த DLL பைலைக காணவில்லையென்ற என்ற அறிவிப்பையும் அடிக்கடி திரையில் காண்பித்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறொரு கணினியிலிருந்து பிரதி செய்தோ அல்லது இணையத்திலிருந்தோ இறக்கி அதனை சரி செய்து விட வேண்டும்.

No comments: