Thursday, October 7, 2010

போல்டர் சைஸ்: பயனுள்ள கருவி



நமது கணினியின் வன்தட்டில் சில சமயங்களில், குறிப்பட்ட பார்டிஷனில் இடம் குறைவாக உள்ளது என்று செய்தி வரலாம். (Low Disc space warning) அல்லது நீங்களாக வன்தட்டில் தேவையில்லாத கோப்புகளை களைந்து, சுத்தம் செய்யலாம் என்று கருதி செயலில் இறங்கி இருக்கலாம்.

இது போன்ற சமயங்களில், 'சிறிய அளவிலான கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தானே இருக்கிறது, ஆனால் இவ்வளவு இடத்தை எது அடைத்திருக்கிறது' என்ற சந்தேகம் வருவது இயற்கை.

இது ஏதாவது temp files , தரவிறக்கம் செய்து வைத்த படங்கள், பாடல்கள், மென்பொருட்கள், அவசரத்திற்கு உருவாக்கிய கோப்புறைகளை களையாமல் வைத்த்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம்.

சரி இந்த சூழலில், நமது வன்தட்டில் எந்த எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை, Search சென்று *.* கொடுத்து தேடி Size வாரியாக வரிசைப்படுத்தி பார்ப்பதற்குள்ளாக சில சமயங்களில் கணினி தொங்கி விடலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆகிவிடலாம்.

இந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு மிகச் சிறிய சுதந்திர இலவச மென்பொருளான Folder Size ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்ற முயற்சி வெற்றியடைந்தது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த சிறிய மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, இதனை இயக்கி,

Explore பொத்தானுக்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், எந்த பார்ட்டிஷனில், எந்த ஃபோல்டருக்குள் எனும் path ஐ கொடுத்து, GO பொத்தானை சொடுக்கினால் போதுமானது.


உடனடியாக அந்த ட்ரைவில் குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் உள்ள சப் ஃபோல்டர்கள் என அனைத்தையும் திரட்டி அதன் அளவுகளோடு வரைபடமாகவே காண்பித்துவிடும். இதனை மௌஸ் வீல் கொண்டு காட்சி பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும், இடது பட்டனை அழுத்தி நகர்த்தவும், வலது பட்டனை அழுத்தி reset செய்யவும் வழியுண்டு.

இப்படி காண்பிக்கும் வரைபடத்தில் எந்த ஃபோல்டரில் அதிக அளவு கோப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு, சந்தேகமான ஃபோல்டரை க்ளிக் செய்து Explore பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் Explorer இல் அந்த ஃபோல்டர் திறக்கும், அதனை சோதித்து, தேவையற்ற பெரிய கோப்புகளை நீக்கி விடலாம்.


No comments: