
சென்ற மாதம் என்னுடைய யுஎஸ்பி டிரைவை தொலைத்து விட்டேன். மிக முக்கியமான கோப்புகளுடன், கடந்த ஆறுமாதமாக சேகரித்த மென்பொருள்கள் அதில் இருந்தன. சிறிய பொருள் ஆதலால் எங்கோ விழுந்து விட்டது. சென்ற இடங்களுக்கெல்லாம் தொலைபேசியில் கேட்டேன். இல்லை என்ற பதில் தான் வந்தது.
நல்லவர் எவரேனும் எடுத்து இருந்து அதை உரியவரிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்து இருந்தாலும் என்னை பற்றிய தகவல்கள் அதில் இல்லை. தொலைந்தது தொலைந்துதான்.
அடுத்து ஒரு புதிய யுஎஸ்பி டிரைவ் வாங்கினாலும், எனது தொடர்பு தகவல்களை அதில் தெரிவிக்க வழி தேடினேன். யுஎஸ்பி டிரைவை கண்டெடுப்பவர் உபயோகிக்கும் போது எனது தொடர்பு தகவல்கள் அவர் கண்ணில் படும்படி இருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ள வழி உண்டு. இணையத்தில் அதற்கு தீர்வாக குட்டி மென்பொருள்கள் கிடைத்தன.
அவற்றை உங்கள் யுஎஸ்பி டிரைவில் நிறுவினால், யுஎஸ்பி டிரைவை திறக்கும் போது உங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து விடும்.
இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் மூன்று கோப்புகள் இருக்கும்.
உங்களை பற்றிய தகவல்கள் இதனை விட சிறப்பாக தோன்ற வேண்டும் என்று எண்ணினால் சற்றே மேம்படுத்தபட்ட இந்த மென்பொருளை இங்கே கிளிக்செய்து தரவிறக்கி கொள்ளுங்கள் . ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் 5 கோப்புகள் இருக்கும்.
autosplash.ini கோப்பில் உள்ள தகவல்களை மாற்றுவதன் மூலம் தோன்றும் செய்தி விண்டோவின் உயரம், அகலம், எத்தனை வினாடிகள் தோன்ற வேண்டும் என்பனவற்றை மாற்றலாம்
[General]
Title=Help! I'm Lost
ShowTitle=False
ImageFile=contactme.jpg
ImageWidth=550
ImageHeight=250
ShowTime=5
எடிட் வேலைகள் முடிந்தவுடன் இந்த ஐந்து கோப்புகளையும் இங்கள் யுஎஸ்பி டிரைவிற்கு மாற்றி விடுங்கள். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல்கள் சில வினாடி தோன்றி மறையும்.
யுஎஸ்பி டிரவின் மீது மௌஸ் வலது கிளிக் செய்து "Explore" கிளிக் செய்வதன் மூலம் யுஎஸ்பி டிரைவில் உள்ள கோப்புகளை பார்வையிடலாம்.
இதன் மூலம் உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனாலும் அதை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
அவர் உங்களை தொடர்பு கொண்டு யுஎஸ்பி டிரைவை உங்களிடம் ஒப்படைப்பார்... அவர் ரொம்ம்ம்ப நல்லவராய் இருந்தால் மட்டுமே...
No comments:
Post a Comment