Tuesday, September 23, 2008

கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்)


பேக்ஸ் சாதனம் (Fax machine) இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்) அனுப்பலாம்.




அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.‏இதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மெ‎‎ன்பொருள்கள் பாவனையிலுள்ளன. விண்டோஸ் எக்ஸ்பியில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் உள்ளி‏ணைக்கப்பட்டுள்ளதால் வேறு மெ‎ன்‎பொருள்களை நிறுவ வேண்டியதில்லை.Windows XP யில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் ஏற்கனவே உள்ளி‏ணைக்கப்பட்டிருந்தாலும் அதனை முத‎ன்‎ முதலில் நிறுவும் போது பேக்ஸ் அனுப்புவதற்குத் தேவையான பைல்கள் நிறுவப்படுவதில்லை. எனவே அதனை நீங்களாகவே install செய்தல் வேண்டும். அதற்குப் பி‎‎ன்வரும் வழி முறையைக் கையாளு‎ங்கள்.முதலில் Start பட்டனில் க்ளிக் செய்து வரும் Start menu ல் Printers And Fax தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில், நீங்கள் ஏற்கனவே பிரி‎ன்டர்கள் இ‏ன்ஸ்டோல் செய்திருந்தால் அதற்கான ஐக்க‎‎ன்களைப் பார்க்கலாம். இப்போது அந்த விண்டோவி‎‎‎ன் இடது பக்கத்தில் இருக்கும் Printer Task எனும் பகுதியில் Setup Faxing எ‎ன்ற கட்டளை இருப்பதைக் காணலாம். அதில் க்ளிக் செய்ய ஒரு Message Box தோன்றி விண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத்துமாறு சொல்லும். அப்போது விண்டோஸ் எக்ஸ்பீ சீடியை உட்செலுத்த, தேவையான பைல்கள் FரA செய்யப்படும். ‏இப்போது பேக்ஸ் சாதனம் போ‎‎ன்ற ஒரு ஐக்க‎ன் அந்த விண்டோவில் வந்திருப்பதைக் காணலாம் .க‎ன்‎‎ட்ரோல் பேனலில் Printer and Fax ஐக்கனைத் திறப்பத‎ன்‎ மூலம் அல்லது Add / Remove Programs ஐக்கனை திறக்க வரும் விண்டோவில் Add or Remove Windows Components தெரிவு செய்வதன் மூலம் வரும் டயலொக் பொக்ஸில் Fax Services தெரிவு செய்து Next க்ளிக் செய்வத‎ன்‎ மூலமாகவும் இதே ‏ இடத்துக்கு வந்து சேரலாம்.‏எவ்வாறு பேக்ஸ் அனுப்புவது? Printer and Fax விண்டோவில் ‏இப்போது Setup A Fax என்ற கட்டளை தோன்றியிருக்கும். அதில் க்ளிக் செய்ய Welcome to Fax Configuration Wizard வரக் காணலாம். அதில் Sender Information ல் உங்கள் விருப்பப்படி விபரங்க¨ளைப் பூர்த்து செய்து Next க்ளிக் செய்யவும். தொடர்ந்து வரும் கட்டத்தில் ‏ Enable Receive, Enable Send இரண்டையும் தெரிவு செய்து மீ‎ண்டும் Next கிளிக் செய்யவும்.அடுத்து TSID யாக உங்கள் பெயரையும் தொலைபேசி ‏இலக்கத்தையும் விரும்பினால் டைப் செய்யுங்கள். ‏‏இதில் டைப் செய்யும் விபரங்கள் மூலம் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவர் அது யாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என அறிந்து கொள்வார். அதேபோல் அடுத்துவரும் CSID லும் ‏இதே விபரங்களை விரும்பினால் கொடுங்கள். ‏இது உங்களுக்கு பேக்ஸ் கிடைக்கப்பெறும் போது அதிலுள்ள விபரங்கள் உங்களுக்கு பேக்ஸ் அனுப்புபவரை அடையும். ‏இப்போது Next கிளிக் செய்ய வரும் Routing Option இல் கிடைக்கப் பெறும் பேக்ஸை விரும்பினால் எந்த பிரி‎‎ன்டரில் அச்சிட வேண்டும் எ‎ன்பதைத் தெரிவு செய்யவும் அல்லது Store a copy in a folder தெரிவு செய்து, கிடைக்கப் பெறும் பேக்ஸ் செய்தியை எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் எ‎ன்‎பதனையும் Browse பட்டனில் கிளிக் செய்து குறிப்பிடவும். பி‎‎ன்னர் Next க்ளிக் செய்ய ‏இந்த Wizard முற்றுப்பெறும். நீங்கள் பேக்ஸ் அனுப்பும் ஒவ்வொரு முறையும் ‏இந்த விசர்ட் வந்து தொல்லை தராது எ‎‎ன்பது ஆறுதலான விசயமாகும்.அடுத்து நீங்கள் அனுப்பவிருக்கும் செய்தியை MS-Word போன்ற ஏதேனுமொரு Word Processor இல் டைப் செய்து கொள்ளு‎ங்கள். பி‎‎ன்னர் பைல் மெனுவில் கிளிக் செய்து அதில் பிரி‎ன்ட் கமாண்டை தெரிவு செய்யவும். அப்போது வரும் பிரி‎‎ன்ட் டயலொக் பொக்ஸில் பிரின்டர் பெயராக Fax தெரிவு செய்வதோடு உங்கள் விருப்பப்படி Print Range தெரிவு செய்து ஓகே செய்யவும்.இ‏ப்போது Send Fax (படம்-1) எ‎‎ன்ற விசர்ட் தோ‎ன்‎‎றும். ‏இங்கு Next க்ளிக் செய்ய Recipient Information (படம்-2) என்ற கட்டத்தில் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவரி‎ன் பெயர், தொலைபேசி இலக்கம் எ‎ன்‎பவற்றை உரிய இடத்தில் டைப் செய்யவும். Use dialing rules என்‎பது தெரிவு நிலையில் ‏இருந்தால் அதனை நீக்கி விடவும். உங்கள் பேக்ஸை ஒ‎‎ன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அ‎னுப்புவதாயின் Add பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொருவரினதும் பெயர் மற்றும் தொலைபேசி இ‏லக்கங்களை டைப் செய்து Next க்ளிக் செய்யவும்.அடுத்த கட்டமாக உங்கள் பேக்ஸ் செய்தியுட‎ன் ‎ ஒரு Cover Page இணைத்து அனுப்ப விரும்பினால் Select a cover page template with the following information (படம்-3) என்பதைத் தெரிவு செய்து தேவையான தகவல் களை டைப் செய்யவும். (எனினும் Cover Page ஐத் தவிர்ப்பது நல்லது) அடுத்து Next க்ளிக் செய்ய Schedule (படம்-4) எ‎ன்‎ற கட்டம் தோன்றும். அதில் எப்போது பேக்ஸை அனுப்ப வேண்டும் எ‎ன்‎பதில் உங்கள் விருப்பம் போல் நேரத்தைத் தெரிவு செய்யலாம். உடனடியாக அ‎னுப்புவதாயின் Now எ‎‎ன்பதையும் Fax Priority யில் Normal எ‎‎ன்பதையும் தெரிவு செய்து Next க்ளிக் செய்ய விசர்ட் இ‏றுதிக் கட்டத்துக்கு (படம்-5) வரும். ‏இங்கு Finish க்ளிக் செய்ய Fax Monitor (படம்-6) எ‎ன்‎ற டயலொக் பொக்ஸ் தோ‎ன்றுவதையும் உங்கள் கணினி நீங்கள் கொடுத்த ‏தொலைபேசி இலக்கத்துக்கு டயல் செய்ய ஆரம்பிப்பதையும் பி‎‎ன்னர் சிறிது நேரத்தில் ‏இணைப்பு கிடைத்ததும் பேக்ஸ் அனுப்பப்படுவதையும் அவதானிக்கலாம். ‏இதேபோல் உங்களுக்கு அனுப்பப்பட்டும் பேக்ஸ் செய்தியைப் பெறுவதானால் Start → Programs → Accessories → Communication → Fax →Fax க்ளிக் செய்ய வரும் விண்டோவிலுள்ள பைல் மெனுவில் Receive a fax தெரிவு செய்யவும். அப்போது பேக்ஸ் மொனிட்டர் தோ‎‎ன்றுவதையும் உங்கள் கணினியில் உள்ள மோடெம் டயல் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். உங்களுக்கு வரும் பேக்ஸ் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். அதனை Fax Console விண்டோவில் inbox கிளிக் செய்து பார்வையிடலாம்.

No comments: