Sunday, August 24, 2008

FIRE FOX

இப்பொழுதுதான் லண்டனில் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டார். நான் அன்று பட்ட பாடு நினைவுக்கு வந்தது.இந்த பிரச்சனைக்கான அடிப்படைக்காரணம், firefox நிறுவனம், சிக்கலான ஒருங்குறி எழுத்துக்களை கையாள்வதற்கான மென்பொருளான pango வுடனான தொடர்பை இயல்பிருப்பில் துண்டித்துவிட்டிருக்கிறது.ஒவ்வொரு தடவை firefox ஆரம்பிக்கும்போதும் pango வுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட மாட்டாது.இந்த துண்டிப்பு pango இலிருக்கும் வழுவொன்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டதாக செவிவழியாக அறிந்திருக்கிறேன். உண்மை தெரியவில்லை.open suse போன்ற வழங்கல்களில் அவர்கள் pango உடனான தொடர்பை தாமாக இயல்பிருப்பில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் எழுத்துக்கள் இயங்குதளத்தை நிறுவிக்கொண்டவுடனேயே எந்த பிரச்சனையும் இல்லாமல் தெரிகிறது.இப்போது உபுண்டுவில் இதனை நாம் கையால்தான் செய்யவேண்டியுள்ளது./etc/environment என்ற கோப்பினை திறந்து அதில் பின்வரும் ஆணையை சேர்க்கவேண்டும்MOZ_ENABLE_PANGO=1சேர்த்து சேமித்தபிறகு firefox இனை மூடி மறுபடி திறந்தால் தமிழ் எழுத்துக்கள் அழகாக தெரியும்.தீ கீ போன்ற எழுத்துக்களின் விசிறி வித்தியாசமாக இருக்கும். பயப்படவேண்டாம். அது உபுண்டு இயல்பிருப்பாக வைத்திருக்கும் தமிழ் எழுத்துருவின் வடிவம். வழு எதுவுமில்லை. இந்த எழுத்துரு பிடிக்காவிட்டால் வேறு எழுத்துருக்களை firefox அமைப்புக்கள் பகுதிக்கு சென்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.பிறகுதான் கேள்விப்பட்டேன் pango இனை உயிர்ப்பூட்டும் இந்த செயன்முறையை நாம் கையால் செய்ய தேவையில்லை. language-support-ta என்று ஒரு பொதி உபுண்டுவிற்கென இருக்கிறது. அந்த பொது இந்த மாற்றம் உள்ளிட்ட தமிழ் பயனர்களுக்கு தேவையான பல மாற்றங்களையும் அமைப்புக்களையும் தானே செய்துதருகிறது. இதனை நிறுவிக்கொண்டால் போதுமானது.repositories எல்லாம் செயற்படுத்தப்பட்ட பின்னர்,sudo apt-get install language-support-taஎன்ற ஆணையை வழங்கினால் போதும். (இணைய இணைப்பு உள்ளவர்கள்)முன்பொருமுறை வேறொரு நண்பர் இந்த பொதி நிறுவப்பட்ட பின்னரும் தனக்கு தமிழ் தெரியவில்லை என ரொம்ப கவலைப்பட்டார்.

பிறகுதான் கண்டுபிடித்தோம் அவர் பயன்படுத்தியது மெய்யான firefox இல்லை. அதன் மூல நிரலிலிருந்து வேறு ஒரு நிறுவனத்தால் இருமவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் swiftfox என்று.ஆக, swiftfox இல் தமிழ் தெரியாது.

No comments: