2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.
Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.
கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment