Monday, April 20, 2009

இன்டர்நெட் அரட்டையில் பாதுகாப்பு


http://www.chat-icons.com/images/girl_chatting.jpg

இன்டர்நெட் உலகில் Broadband வசதி வந்ததிலிருந்து இணையம் வழியாக முகம் தெரிந்த மற்றும் தெரியாத யாருடனும் அரட்டை அடிப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது. முதலில் பொழுது போக்காகத் தொடங்கி நல்ல நட்பாக மாறும் அரட்டைகளும் உண்டு. அதே நேரத்தில் பல அரட்டைகள், ஏமாற்றுதல், திருட்டு திருமணங்கள், பாலியியல் பலாத்காரங்கள் என முடிந்த செய்திகளும் நாம் காண்கிறோம்.இவை தவிர இணையத் தொடர்பிற்குப் பயன்படுத்தப்படும் கணினிகளும் பலவிதமான பாதிப்பிற்கு உள்ளாவதும் பரவலாக ஏற்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பாதிப்புகளுக்கு தனி மனித ஒழுக்கம் தேவை. ஆனால் கணினியை பாதுகாக்க சில பாதுகாப்பு வழிகள் தேவை. இவை இரண்டையும் இங்கு காண்போம்.

http://gamesareart.files.wordpress.com/2007/02/chatting.png

சற்றிங் (Chating) எனப்படுகின்ற அரட்டையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அபாயகரமானவர்கள் என்ற பய உணர்ச்சி உங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். எனவே அறிமுகம் தெரியாத எவரிடமும் உங்களின் பெயர், முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற எதனையும் கொடுக்க வேண்டாம்.நீங்கள் வழக்கமாகச் செல்லும் அல்லது மேற்கொள்ளும் பணிகள் எதனையும் அரட்டை அறையில் தெரிவிக்க வேண்டாம்.குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரி செல்லும் நேரம், பணிக்குச் செல்லும் நேரம், இணையத்தில்(இன்டர்நெட்டில்) அரட்டை அறைக்கு வரும் நேரம் ஆகியவற்றைச் சொல்லவே கூடாது.உங்களுடைய கணினி வாழ்க்கையையும் நிஜவாழ்க்கையையும் இணைக்க வேண்டாம்.

கூடுமானவரை அரட்டை அறையில் அறிமுகமாகும் நபர்களை வெளியே சந்திப்பதனைத் தவிர்க்கவும்.முக்கியமாக சந்திக்க வேண்டுமானால் தனியானதொரு இடத்தில் இந்த நண்பர்களைச் சந்திப்பதனைத் தவிர்த்திடுங்கள். சுற்றிலும் ஆட்கள் இருக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து சந்தியுங்கள். உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் நீங்கள் எங்கு யாரைச் சந்திக்கச் செல்லுகிறீர்கள் என்பதனைச் சொல்லிச் செல்லுங்கள்.

சற்றிங் செய்திடுகையில் ஏதேனும் இணையத் தளத்திற்கான தொடுப்புகள் இருந்தால் அவற்றில் கிளிக் செய்து அத்தளம் செல்வதனைத் தவிர்த்திடுங்கள். அதன் மூலம் உங்கள் கணினிக்கு வைரஸ் வரலாம். அல்லது உங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாலியல் சமாச்சாரங்கள் அடங்கிய தளமாக அது இருக்கலாம்.உங்களுடைய புகைப்படத்தினை எந்த காரணத்தைக் கொண்டும் கொடுக்க வேண்டாம். இதனால் அடுத்த முனையில் இருப்பவர் உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய வாய்ப்புண்டு.

அவர் தான் அவருடைய படத்தினை அனுப்பி விட்டாரே நாம் அனுப்பினால் என்ன என்று எண்ண வேண்டாம். அவர் அனுப்பிய படம் அவருடையது தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?இங்கே கூறிய எல்லா விஷயங்களும் உங்களுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த அறிவுரைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள்


முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் Floppy தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி Network க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் Jump Drive கள் அல்லது Pen Drive கள் எனப்படும் USB Drive கள் வழியே பரவுகின்றன. இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு Pen Drive வை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link

2.Tweak UI எனும் Microsoft இன் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
Tweak UI Download Link

3.ClamWin எனப்படும் இலவச Portable Antivirus மென்பொருளை உங்கள் Pen Drive வில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு Scan செய்துகொள்ள உதவும்.
ClamWin Download Link

4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
USB Drive Disabler Download Link

5.சில பிரபல Flash Drive Virus,Warm களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.
Flash Disinfector Download Link

Tags: , , , , ,

தமிழ் லினக்சை நிறுவும் கையேடு-1


லினக்ஸ் பொதியப்பட்ட டிவிடி வட்டை அதன் இயக்கியில் வைத்து கணினியை டிவிடி மூலம் பூட் செய்யவும்.
முதல் திரையில் வரும் 5 விருப்பங்களில் முதலில் உள்ள Install or Upgrade an existing system தேர்வு செய்து என்டர் விசையை அழுத்தவும்.


இப்போது வருவது பெடோரா லினக்ஸ் பொதியப்பட்ட நமது டிவிடியை சரிபார்க்க உதவும் திரை.சரிபார்க்க வேண்டாம் என்றால் Skip க்ளிக் செய்து நிறுவலை தொடங்கலாம்
லினக்ஸ் நிறுவல் தொடங்குவதற்கான முதல் திரை.இதை Next என்பதை க்ளிக் செய்யவும்
முக்கியமான திரை.எந்த மொழியில் லினக்சை நிருவப்போகிறோம் என்பதில் தமிழ் மொழியை தேர்வுசெய்து என்பதை Next க்ளிக் செய்யவும்.இதற்கு பிறகு வரும் திரை அனைத்தும் நமது தமிழ் மொழியில் தெரியும்.
கணினிக்கு தகுந்த விசைப்பலகையை தேர்வு செய்யவும்.உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்யலாம்.நான் இங்கு யு.எஸ்.ஆங்கிலம் என்பதை தேர்வு செய்துள்ளேன்.இங்கு தமிழ்(இன்ஸ்கிரிப்ட்) மற்றும் தமிழ்(Typewritter) விசைப்பலகைகளும் உள்ளன.


இப்போது வருவது நிலைவட்டில் பகிர்வுகளை உருவாக்கும் திரை.இதில் முன்னிருப்பாக(default) தேர்வு செய்யப்பட்ட பகிர்வு(Partition) அமைப்பு பெரும்பாலான பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.


இல்லையென்றால் கிழ்கண்ட நான்கு விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்து பகிர்வுகளை உருவாக்கவும்.
பூட் லோடரை பற்றிய தகவல்களை கொடுக்கவேண்டும். முன்னிருப்பு விருப்பம் என்னவோ அதை தேர்வு செய்து அடுத்து அழுத்தவும்

இந்த திரையில் பிணைய(Network) சாதனங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் புரவலன் பெயர்(host name) போன்றவற்றை கொடுத்து அடுத்து பொத்தானை அழுத்தவும்

DHCP தேர்வு செய்யப்பட்டிருந்தால் தானாகவே IP,DNS ,hostname போன்றவற்றை அமைத்துக்கொள்ளும்.இல்லையென்றால் நீங்கள் கைமுறையாக(custom) கொடுக்கலாம்


அன்றும் இன்றும்-1


தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைத்தான் இங்கு பார்க்கமுடிகிறது.

ஆம் 20 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட 1 GB ஹார்ட் டிரைவும் இப்போது உள்ள 1 GB மெமரி கார்டும்..

தமிழில் விண்டோஸ் மற்றும் office


விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன
Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது
Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு


Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:
பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:
1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் OK கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:
1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

உலகமுழுதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் …


ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.
JAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.

http://www.jaxtr.com/user/index.jsp

யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக SMSஅனுப்பிக்கொள்ளலாம்.
இதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கீழ்கண்ட இணையதளம் மூலம் இந்தியாவிற்குள் SMS அனுப்பமுடியும்
http://www.way2sms.com
http://www.indyarocks.com

http://www.youmint.com

GMAIL user

ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:


ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

தமிழில் ஜிமெயிலை தமிழில் காண
உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்.