Friday, August 6, 2010

ஸ்டார்ட் மெனுவை நகர்த்த


நமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்

ஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து

இங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும். இந்த சின்ன

ப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.

இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




உங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய

டிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.





உங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு

சிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்

நகர்த்துங்கள். அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்

கொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்

பெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.

பெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்

மின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்

Steps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்

மெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.




கீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம் வைத்துள்ளதை கவனியுங்கள்.




நீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்

கீழே உள்ள விண்டொவில் காணுங்கள்.



இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில் வைத்துள்ளேன்.



இப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால் Stop செய்யலாம். பயன்படுத்திப் பாருங்கள்

 

Thursday, July 29, 2010

முதல் தமிழ் கணினிப் பணிச்சூழல் (First Tamil Computer Desktop Environment)


இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழில் கணினிக்குப் பணிச்சூழல் வெளிவந்தது தமிழ் மொழியில் தான் என்பது இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

(இங்கே உள்ள படங்களின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)


GNU/Linux இற்கான KDE பணிச்சூழலே இவ்வாறு முதன் முறையாகத் தமிழ் இடைமுகப்பைக் கொண்டு வெளி வந்தது.


October 22 ம் நாள் 2000ம் ஆண்டு வெளிவந்த KDE 2.0 பதிப்பு இவ்வாறு தமிழ் இடைமுகப்பினை முதன்முறையாக உள்ளடக்கியிருந்தது.


பரவலாக தமிழ்ச்சூழலில் GNU/Linux பயன்பாடு வந்துவிட்டது. சொற்பமாயினும் சிலபேர் தமிழாக்க முயற்சிகளில் பங்கெடுக்கிறார்கள். இலங்கையில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி சர்வேஸ் போன்றவர்கள் பங்குபெறும் தமிழாக்க வேலைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தமிழ் உபுண்டு குழும அங்கத்தவர்கள் பலர் தமிழாக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதெல்லாம் எமது தலைமுறையினர்.

முன்னர் தமிழாக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைமுறையினரும் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர்.




இந்த முதல் தமிழ் KDE வந்த காலம் அவ்வாறானதல்ல. தொழிநுட்ப ரீதியாக, ஆளணி வள ரீதியாக மிகப்பெரிய சவால்களுக்கு முகம் கொடுத்தே தமிழாக்க வேலைகளைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

இந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து சீராகச் செய்திருந்தவர்கள் Siva, Gomathi,Dinesh, Venkat, Vasee எனும் பெயர்களுடையவர்கள் என்று நான் தேடிய மூலங்களில் காணக்கிடைக்கினறன.


tamillinix yahoo group ஒரு பெரும் கடல் அங்கே மூழ்கினால் தமிழ் க்னூ லினக்ஸ் வரலாற்றின் முத்துக்களை நிறையப் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் வசீகரன் குழுவினர் பின்னர் இந்த தமிழ் இடைமுகப்புக்கொண்ட KDE இனை உள்ளடக்கி தமிழ் Knoppix நிகழ் வட்டினை உருவாக்கி வெளியிட்டிருந்தனர். அதுபற்றி பின்னரொருபோது விளக்கமாக எழுதுகிறேன்.


இந்த அருமையான தமிழ் இடைமுகப்பு வந்து பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் Microsoft எனும் பெரு வணிக நிறுவனத்தின் தமிழ் இடைமுகப்புப் பொதி வெளியிடப்பட்டது (அதுவும் சமூக உழைப்பைத் திருடி).

இலாப நோக்கற்ற சமூக அக்கறையும், மொழி மீதான நேசமும் கூட்டுழைப்பும் கணிமை உலகில் செய்திருக்கும் வியத்தகு சாதனைகளுக்கு தமிழ்ச்சூழலில் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.




இடைமுகப்பானது UTF-8 TSCII குறிமுறையில் அமைந்துள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்தில் ஒருங்குறி ஆதரவு பரவலாக இருக்கவில்லை. கூடவே ஒருங்குறி தொடர்பான விவாதங்கள் பெருமளவில் ஓயாமலிருந்தது.



இங்கே KOffice இல் தமிழைக் காண்கிறோம் அக்காலத்தில் இருந்த சொற்ப அலுவலகச்செயலிகளுள் ஒன்று. இது இப்போது மிக சீர்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது. TSCII இலிருந்து ஒருங்குறிக்கு மாறியபோது தமிழர்கள் Koffice இனைக் கைவிட்டார்கள். நீண்டகாலத்துக்குப்பிறகே ஒருங்குறி ஆதரவு அதில் கிடைத்தது. இப்போது எல்லோரும் Openoffice பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம்.



மயிலை98 இனை அடிப்படையாகக்கொண்ட TSCII விசைப்பலகை உள்ளீட்டு முறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர தமிழ் VP என்றெல்லாம் உள்ளீட்டு முறைகள் இருந்தன. இந்த உள்ளீட்டு முறைகளின் வரலாறு குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்து எழுத வேண்டும்.


இது முனையத்தில் தமிழைக் கொண்டுவர அக்காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. தமிழ் முனையம் ஒன்றை சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கைகளின் தொடக்கம். இப்போது ஒருங்குறி வந்தபின் இதைவிட மோசமான நிலையில் தான் தமிழ் முனையப் பயன்பாடு இருக்கிறது. ஒரேயகல எழுத்துக்கள் என்ற பிரச்சினை தாண்டப்படமுடியாத சிக்கல். இப்போது ஏறத்தாழ தமிழ் முனையம் தொடர்பான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டது. வரைகலைப் பயனர் இடைமுகம் எல்லாவற்றையும் செய்யத்தொடங்கிவிட்டது.


UTF8-TSCII codec இனை Hans Peter Bieker என்பவர் உருவாக்கியளித்துள்ளார்.










இங்கே நான் சொல்லத்தவறிய தகவல்களையும் தவறுகளையும் போதாமைகளையும் அறிந்தவர்கள் பினூட்டம் வழியாக திருத்தி நிரப்பி விடுங்கள்.

இப்பதிவுக்கு ஆதாரமாக அமைந்தவை:

  • தமிழ்ழிலின்ஸ் yahoo குழும மடற்களஞ்சியம் http://tech.groups.yahoo.com/group/tamilinix/
  • http://tamillinux.sourceforge.net/
  • எனது சொந்த அனுபவங்கள்

iPad போட்டியாக மைரோசாப்டின் Goriyar


ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.

ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் இ புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் கேமிராவும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் கால‌ண்ட‌ர் வ‌ச‌தியும் இணைக்க‌ப்ப‌டுள்ள‌து.

இத‌ன் விலையும் ஐபேடை விட‌ குறைவாக‌ இருக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப‌டுகிற‌து.எப்போது வேண்டுமானாலும் இத‌ற்கான‌ அறிவிப்பு மைக்ரோசாப்டிட‌ம் இருந்து வ‌ர‌லாம் என்கின்ற‌ன‌ர். பார்ப்போம்.

இந்திய‌ர்களுக்கான புதிய பிர‌வுச‌ர் அறிமுக‌ம்


இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .

எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த Mozilla மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே இணைய உலகில் பாடு ஓட்டர்ஸ் எனும் இணைய தளத்தை நடத்தி புகழ்பெற்றவர் இவர். தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.

புகழ் பெற்ற IE, Opera, Google chrom, Firefox என பல பிரவுசர்கள் இருந்தாலும் தனித்துவமான பல அம்சங்களோடு இந்தியர்களுக்கென்று எபிக் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான முதல் பிரவுசர் என்று பெருமிதம் கொள்ளும் இந்நிறுவனம் உலகிலேயே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கொண்ட முதல் பிரவுசர் இது என்றும் கூறுகிறது. எனவே இந்த பிரவுசரை பயன்படுத்தினால் வைரஸ் தொல்லை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

அதோடு ஆபத்தான தளங்கள் பற்றிய எச்சரிக்கையும் இந்த பிரவுசரிலேயே கிடைக்கும். இணைய தளங்கள் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான பிஷ்ஷிங் மோசடி குறித்தும் இந்த தளம் இணையவாசிகளை எச்சரிக்கை செய்தவண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையவாசிகளின் தனிப்பட்ட விவரங்களும் இந்த பிரவுசரில் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தன்மையோடு கூடிய எண்ணற்ற வசதிகள் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரவுசர் தனக்கென வேர்ட் பிராஸசர் கொண்டுள்ளதால் தமிழ் உள்பட 12 இந்திய மொழிகளில் இந்த பிரவுசரை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம்.

மேலும் திரைப்பட பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், பிராந்திய மொழிகளில் செய்தி, பங்குச்சந்தை விவரங்கள் என 1000க்கும் மேற்பட்ட வசதிகளுக்கான செயலிகளும் இந்த பிரவுசரில் இணைக்கப்பட்டுள்ளது. ஜி மெயில், ஆர்குட் போன்ற சேவைகளையும் இதிலிருந்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவற்றோடு பயர் பாக்சுடன் இணைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளக்கின் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரவுசரின் மற்றொரு சிறப்பம்சமாக யுடியூப் போன்ற வீடியோ தளங்களை பார்க்கும் போது பிரவுசருக்குள்ளேயே சின்னதாக தனியே ஒரு பெட்டி தோன்றும். அதில் வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

பிரவுசரை இணையவாசிகள் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.

————–http://www.epicbrowser.com/

கவிதை கேளுங்கள்;அழைக்கும் இணையதளம்.



நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர்.

கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல கவிதைகளை கேட்கச்செய்வதற்கான இணையதளமாக இது அமைகிறது.

கவிஞர்கள் இந்த தளத்தில் தங்களது கவிதைகளை தங்கள் குரலிலேயே வெளியிடலாம்.

இதற்காக கவிஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து தங்கள் கவிதையை வாசிக்க வேண்டியது தான்.கவியரங்கத்தில் பாடுவது போல ஏற்ற இறக்கத்தோடு உண‌ர்வு பொங்க‌ க‌விதை வாசிக்க‌லாம்.

அத‌ன் பிற‌கு இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் க‌விதை வாசிப்பை அழ‌காக‌ ஒலிப்ப‌திவு செய்து அத‌ற்கென‌ த‌னி முகவ‌ரியையும் உருவாக்கி த‌ருகிற‌து.அந்த‌ முக‌வ்ரியை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி வைத்து க‌விதையை கேட்டு ம‌கிழ‌ செய்ய‌லாம்.

ஆனால் ஒன்று அது உண்மையிலேயே க‌விதையாக‌ இருக்க‌ வேண்டும்.இல்லையென்றால் ந‌ண்ப‌ர்க‌ளின் பாடு திண்டாட்ட‌ம் தான்.

அமெரிக்காவை மைய‌மாக‌ கொண்ட‌ த‌ள‌ம் என்ப‌தால் போன் க‌ட்ட‌ண‌ம் ம‌ற்றும் ப‌ய‌ன்பாட்டில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வும்.

–http://www.ringpoem.com/